ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது.

பாறுக் ஷிஹான்.
பல பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் வசமிருந்து 4 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்த்கக்கது
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்தவரெனவும் இவர் மீது ஏலவே 6 பிடியாணைகள் நிலுவையில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும் சான்றுப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நிதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமார வழிகாட்டுதலில் ஊழல் ஒழிப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி என்.ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
