ஏறாவூர் மீரா பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா.
ஏறாவூர் மேலதிக செய்தியாளர் .

ஏறாவூரில் இரண்டு தசாப்தங்களை கடந்து பயணிக்கும் மீரா பாலர் பாடசாலையின் 2025ம் ஆண்டுக்கான விடுகை விழாவும் கலை நிகழ்ச்சியும் மீரா பாலர் பாடசாலையின் தலைவர் எஸ்.அமீன் தலைமையில் மட்/அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சனிக்கிழமை (10/01)அன்று இடம்பெற்றது .
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் தவிசாளருமான எம்.எஸ்.நழீம் கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் பிரதி தவிசாளர் ஜீ.கஜேந்திரன்,நகரசபையின் உறுப்பினர்களான எம்.ஐ.நாசர்,எஸ்.எம்.ஜப்பார்,
எம்.ஆர்.நஸீர்,ஏ.எம்.உவைஸ்,
ஆர்.றிக்னாஸ்,ஏ.சுபைதா உம்மா ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் விஷேட அதிதிகளாக ஏறாவூர் அஹமட் பரீட் வித்தியாலய அதிபர் எம்.எம்.ஜெஸான்,
முன்பள்ளிகளுக்கான இணைப்பாளர் சக்கீனா பௌசுல், ஏறாவூர் நகர் பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.மஹ்பூல் உட்பட மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் என பலர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அதிதிகளின் பாராட்டினையும் வரவேற்பினையும் பெற்று இருந்ததுடன் மாணவர்களை பாராட்டி நினைவுச்சின்னம் மற்றும் புத்தகப் பை என்பன அதிதிகளின் கரங்களினால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
