ஏறாவூரில் அப்பாவி முஸ்லீம்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 35வது சுஹதாக்கள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
செய்தியாளர்
உமர் அறபாத் .
ஏறாவூரில் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளால் வெட்டியும்,சுட்டும்,
கடத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்களின் 35வது நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
சுஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் ஏறாவூர் நூருஸ்ஸலாம் பள்ளிவாயலில் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டு விஷேட துஆ பிராத்தனை நிகழ்வும் இன்று செவ்வாய்கிழமை சுபஹ் தொழுகையினை தொடர்ந்து இடம்பெற்றது .
ஏறாவூர் சுஹதாக்கள் பேரவையின் தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உள்ளூர் அரசியல்வாதிகள்,ஊரின் முக்கிய பிரமுகர்கள் ,கல்விமான்கள்
உலமாக்கள், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி,வர்த்தக சங்க பிரதிநிதிகள் ,
பொதுச்சந்தை சங்கத்தின் பிரதிநிதிகள் ,சமூகமட்ட அமைப்புக்கள்,மத்ரசா மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
இந்நிகழ்வின் போது ஏறாவூர் நகர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது இருந்ததுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன.



