

ஏறாவூர் ஸகாத் ஜூம்ஆ பள்ளிவாயலில் விஷேட போதை ஒழிப்பு வேலைத்திட்டம் .
செய்தியாளர்
உமர் அறபாத் .
ஏறாவூர் பற்று ஸகாத் கிராமத்தில் அமைந்துள்ள ஸகாத் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து பள்ளிவாயல் செயலாளர் AL.அக்தார் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் நிருவாகம் ,சமூகம்,
சுற்றாடல் ஆகிய பிரிவுகளுக்கான பொறுப்பதிகாரி SL.சரூக்,ஏறாவூர் நகரசபை உறுப்பினர் MS.பர்ளீன் ,மீராகேணி பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் MM.சக்கூர்,இஜாஸ் மௌலவி, தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பாளர் MM.சிறாஜ்,சமூக ஆர்வலர்களான ACM.பஹாத்,MM.பர்ஹத் உட்பட பள்ளிவாயலின் உப தலைவர் SI.பரீட் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போதை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரமும் இதன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இளையோர் சமுதாயத்தை கேள்விக்குறியாக்கி நிற்கும் போதைப் பாவனையை பிரதேசத்தில் இருந்து முழுமையாக இல்லாமல் ஆக்குவதே இச் செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் என ஸகாத் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகிகள் தெரிவித்து இருந்தனர்.