

பொலன்னறுவை, பள்ளித்திடலில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் மரணம்.
நேற்று (30) பிற்பகல் வேளை வயலுக்குச்சென்ற போதே இத்துயர் மிகு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலம் சென்றவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீட் என அறியப்படுகிறார்-
அன்மைக்காலங்களாக காட்டு யானைகளின் தாக்குதலினால் அப்பாவி உயிர்ப்பலிகள் அதிகரித்துள்ளதையிட்டு பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.
இதே நேரம், கடந்த வாரம் நாட்டில் பிறிதொரு பகுதியில் வயலுக்குச்சென்ற தாயும் மகளும் காட்டு யானையின் தாக்குதலினால் பலியானமை பெரும் பரபரபை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
