

ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினி பை வழங்கி வைப்பு..
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினா்களுக்கு மடிக்கணினி பை வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(06) அல்-பஜ்ர் பள்ளிவாயலில் நடைபெற்றது.
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் சிரேஷ்ட ஊடகவியலாளா் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்
விடிவெள்ளி பத்திாிகையின் பிரதம ஆசிரியா் எம்.பீ.எம்.பைரூஸ் ,காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தா் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஜவாஹிா் (பலாஹி) ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் போரத்தின் ஆயுட்காலத் தலைவா் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) உட்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகளால் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினா்களுக்கு மடிக்கணினி பைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
