மட்டக்களப்பில்  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று (12) பரீட்சிக்கப்பட்டன.

நாடாவியரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு பாடசாலை மாணவர் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு
பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் பாதுகாப்பு மற்றும் நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வாகனங்களில் மேலதிகமாக பொருத்தப்பட்டிருந்த உபகரணங்கள் பரிசோதகர்களினால் அகற்றப்பட்டன.

போக்குவரத்து பரிசோதகர்களான ஜே.கே. அழகப்பெரும, நுவன் குலதிலக, போக்குவரத்து பொலிஸ் அலுவலக பொறுப்பதிகாரி ஆர்.கே. செனவிரத்ன, போக்குவரத்து பொலிசார் என பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top