கொழும்பு மருதானை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் மருதானை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.

பொதுமக்கள் மத்தியில் இந்நாட்டின் புகையிரத சேவை தொடர்பில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பி, அதனை மிகவும் செயற்திறனான, வசதியான மற்றும் பிரபலமான போக்குவரத்து வழிமுறையாக மாற்றுவதற்கும், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவும். இதற்காக ஒன்றிணையும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, ‘Clean Sri Lanka’ செயலகம் உட்பட அரச நிறுவனங்கள், தேசிய புத்திஜீவிகள் அமைப்பு (NIO Engineering), தனியார் துறை உள்ளிட்ட அனைவரினதும் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை மிகவும் பாராட்டுவதாக ஜனாதிபதி தனது உரையின் போது குறிப்பிட்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top