

கிராஅத் போட்டியில் உமைர் அஹமட் முதலிடம் .
செய்தியாளர் …
உமர் அறபாத்.
மத்ரஸாவுகளுக்கு இடையிலான 10வயதின் கீழ் பிரிவில் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்ற ஏறாவூர் அல் -மத்ரஸதுல் முஹம்மதியாவின் மாணவச் செல்வன் எம்.கே.உமைர் அஹமட் இற்கான கௌரவிப்பு நிகழ்வு சாபி பள்ளிவாயலில் மத்ரஸதுல் முஹம்மதியாவின் பணிப்பாளர் அஷ்ஷேய்க்.KMM.கபீர் (இஹ்ஸானி)தலைமையில் (16/10) வியாழக்கிழமை அன்று அஸர் தொழுகையினை தொடர்ந்து இடம்பெற்றது .
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
காத்தான்குடி ஜாமிய்யதுல் ஜமாலியா அரபுக் கலாசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் MLM.சப்ராஸ்(பஹ்ஜி) கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
மேற்படி நிகழ்வில் ஏறாவூர் ஷாபி பள்ளிவாயலின் தலைவரும் ஆசிரியருமான எம்.ஜே.எம்.பைறூஸ் உட்பட பிரதேச பொதுமக்கள் மத்ரசா மாணவ மாணவிகள் பலர் பங்கேற்று இருந்தனர் .
