
தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் இருபத்து நான்கு மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் கௌரவ தவிசாளர் தலைமையிலான அனர்த்த முகாமைத்துவ மையமொன்றை ஏறாவூர் நகர சபையில் உருவாக்குவதற்கு நேற்றைய தினம்
இடம்பெற்ற ஆறாவது மாதாந்த அமர்வில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைவாக ஏறாவூர் நகர சபையின் அனர்த்த மையக் குழுவானது கௌரவ உறுப்பினர்களை
உள்ளடக்கியதாக செயற்படும். எனவே, அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்கள் குறித்த தகவல்களை
உடன் நகர சபையின் அனர்த்த மையத்திற்கு அறியத்தருமாறு கௌரவ நகர முதல்வர் அல்ஹாஜ். எம். எஸ். நழீம்
அவர்கள் அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றார்.
அவசர தொடர்புகளுக்கு :
*கௌரவ தவிசாளர் – 0773535358
*கௌரவ பிரதி தவிசாளர் – 0763001035
*முகாமைத்துவ உத்தியோகத்தர் (தரம் I ) – 0759205181
*அனர்த்த முகாமைத்துவ விடய உத்தியோகத்தர் – 0752815942
*மேற்பார்வையாளர் – 0760230073
*அலுவலகம் (அலுவலக நேரங்களில் மட்டும்) – 0652240486
