கோறளைப்பற்று மேற்கு, மத்தியில்
‘பிரஜா சக்தி’ தெளிவூட்டல் செயலமர்வு.
(ஏ.சி.எம்.ருமைஸ்)
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ‘பிரஜா சக்தி’ தேசிய வறுமையொழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு (23) செவ்வாய்க்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரஜா சக்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான தெளிவூட்டல் செயலமர்வின் வளவாளர்களாக சமூக வலுவூட்டல் அமைச்சின் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் கலந்து கொண்டார்.
அத்துடன், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு, மத்தி பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்களான எஸ்.ஏ.எம்.றியாஸ், ஏ.சுதாகரன், மற்றும் கோறளைப்பற்று மத்தி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.ஷாஹித் ஆகியோருடன் குறித்த பிரதேச செயலக கிராம சேவையாளர் பிரிவுகளின் பிரஜா சக்தி தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




