

ஏறாவூர் நகர் பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவுகளுக்கான பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் தலைவர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் கீழ் காணப்படும் 15 கிராம சேவகர் பிரிவுகளுக்கான சமுதாய அபிவிருத்தி(பிரஜா சக்தி) சபைத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 11/12/2025 வியாழக்கிழமை இன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் SH.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வுக்கு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
