


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் முதல் நாள் நிகழ்வு
ஏ.சி.எம்.ருமைஸ்
மலர்ந்திருக்கும் 2026ம் ஆண்டின் ஆங்கில புது வருடத்தினை வரவேற்று கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (2026.01.01) இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஐ.என்.ஸாஹித், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்..தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத் மற்றும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் பிரதேச செயலகத்தின் முன்றலில் தேசிய கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இன்றைய முதல் நாள் நிகழ்வு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத்தொடர்ந்து நாட்டிற்காக தமது உயிர்களை அர்ப்பணித்த சகலரையும் நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மெளனப்பிரார்த்தனை, உதவிப்பிரதேச செயலாளர் அவர்களினால் அரச சேவை உறுதி மொழி சத்தியப்பிரமாணம் வழங்கப்பட்டது.
அத்துடன், அலுவலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டதுடன் தற்போதுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்காக அரசு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம், குறித்த நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக அரச ஊழியர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் பிரதேச செயலாளரின் சிறப்புரை இடம்பெற்றது.
