கோறளைப்பற்று மத்தி, ஹிஜ்ரா நகரில் முதலாவது போதைப்பாவனையாளர் புனர்வாழ்வு நிலையம் திறந்து வைப்பு
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைய முழு நாடுமே ஒன்றாக என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கமைய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் போதைப்பாவனையாளர்களின் நன்மைகருதி இலங்கையில் தமிழ்மொழியிலான முதலாவதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் பிரிவில் ஹிஜ்ரா நகரில் 19.01.2026ம் திகதி திங்கள்கிழமை அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.



மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கே.எஸ் கொத்தலாவல கலந்து கொண்டு நிலையத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாறக், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் , ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வெளிக்கள உதவி பணிப்பாளர் நிலானி அலுத்கே, ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதித்திட்டப்பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகியவற்றின் கணக்காளர் எம்.ஐ.ஏ.சஜ்ஜாத், வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி. எம்.றசாட், மட்டக்களப்பு மாவட்ட பிராத்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் மற்றும் உயரதிகாரிகள், பிரஜா சக்தி தவிசாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்தில் உலவள ஆலோசனை நிலையமாகச் செயற்படும் இந்நிலையம் எதிர்காலத்தில் போதைப்பாவனையாளர்களை தங்க வைத்து பயிற்சி வழங்கக்கூடிய நிலையமாக மாற்றப்படுமென அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி. எம்.றசாட் தெரிவித்தார்.
