ஓட்டமாவடி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது.

ஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்கிரஸ் வசமானது – தவிசாளராக எம்.எஸ்.ஹலால்தீன் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் போது, ஐக்கிய தேசியக்கட்சி, சுயேட்சைக்குழு உறுப்பினர், தமிழரசுக்கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கியிருந்தனர். ஏலவே, தவிசாளர் பதவியைப்பெற்றுக்கொண்ட எம்.எச்.எம்.பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதைத்தொடந்து தவிசாளர்…

Read More

காத்தான்குடி ஜமிய்யதுல் உலமா கிளையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம். (எம்.பஹத் ஜுனைட்) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும்மாபெரும் இரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை (16) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவருகிறது. காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கிளை தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எம்.ஹாறூன் (ரஷாதி) தலைமையில் இடம்பெற்ற இம் முகாமில் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு…

Read More

பங்களாதேஷ் ஊடகத்துறை பேராசிரியர் கபில் கானுடன் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு.

பங்களாதேஷ் ஊடகத்துறை பேராசிரியர்கபில் கானுடன் மீடியா போரம் சந்திப்பு. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் (Daffodil International University) ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறை இணைப் பேராசிரியர் அப்துல் கபில் கான்அவர்களுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை அன்று (13.11.2025) கொழும்பில் இடம்பெற்றது. போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் தலைமையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஊடகத்துறை மேம்பாடு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பங்களாதேஷிலுள்ள…

Read More

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  அதன்படி, சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 24 ஆம்…

Read More

ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா.

ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் முப்பெரும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது! (ஏ.எல்.எம்.சபீக்) மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் முப்பெரும் விழாக்கள் (06) வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஏ. எம். கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல்.சேட், ஆப்தீன் கலந்து கொண்டார். மேலும், கௌரவ அதிதிகளாக சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்…

Read More

அஸீஸா பௌன்டேசனினால் மாணவர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கி வைப்பு.

ஏறாவூர் மட்/றகுமானியா மகா வித்தியாலய பெண் மாணவிகள் 200 பேருக்கு சுகாதார பாவனை பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது . கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அஸீஸா பவுன்டேசன் மாணவர்களுக்கு பொருட்களை வழங்கி இருந்தது. மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்,அஸீஸா பௌன்டேசனின் பணிப்பாளர் ஸாதீக் ஹஸன் ,ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.றிக்னாஸ்,ஏறாவூர் பற்று…

Read More

சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு.

தகவல் திணைக்கள பணிப்பாளர்நாயகம் – மீடியா போரம் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 06.11.2025 வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் எம்.பீ.எம்.பைறூஸ் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். இச் சந்திப்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மும்மொழி ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுக்கான பயிற்சி மற்றும் நலன்புரி திட்டங்கள், தகவல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்…

Read More

2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாளை(07)பாராளுமன்றில் ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதியால் நாளை பாராளும்னறில் சமர்ப்பிப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாளை (07) நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் நாளை பகல் ஒரு மணிக்கு வரவுசெலவுத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் விளக்கவுரையும் இடம்பெறவுள்ளது. எனவே, “இம்முறை அபிவிருத்தி சார்ந்த வரவு செலவுத் திட்டமே முன்வைக்கப்படும். இதுவரை காலமும் சலுகைகள் கிடைக்காத மக்களுக்கும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் வர்த்தக சமூகத்தினர், பல்கலைக்கழக…

Read More

அரசாங்கம் முன்னெடுத்து வரும் போதையொழிப்பு மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.

அரசாங்கத்தின் போதையொழிப்பு மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு முயற்சிகள் நாட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளிக்கிறது : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி பாராட்டுகிறது. செய்தியாளர் (நூருல் ஹுதா உமர்) உலகின் அழகிய நாடுகளில் ஒன்றான சகல வளமும் மிக்க எமது தேசம் அபிவிருத்தியடையாமல் இருந்த காரணங்களில் லஞ்சம், ஊழலும், போதைப்பொருள் பாவனையும் அதீத செல்வாக்கு செலுத்தியது.இலங்கையில் போதைப்பொருள் பரவல், சமூகத்தின் அடித்தளங்களை அசைத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சமூக ஆபத்தாக மாறியுள்ள இக்காலகட்டத்தில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக ஏ.ஐயுடன் கமரா மற்றும் ஊடக தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டு. மாவட்டத்தில் முதல் தடவையாக ஏ.ஐயுடன் கமரா மற்றும் ஊடக தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் அங்குரார்ப்பணம். பெண்களின் வாழ்வாதாரத்தினை நவீன தொழில் வாய்ப்பு மூலமாக வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக ஏ.ஐ மற்றும் கமரா தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாஸ் கெம்பஸின் ஆலோசகர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் காத்தான்குடி நாஸ் கெம்பஸ் பிரதான மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது. இதன் போது…

Read More
Back To Top