விபத்தில் வைத்தியர் உயிரிழப்பு.

எரிபொருள் பௌசர், முச்சக்கர வண்டி மோதி விபத்து; வைத்தியர் உயிரிழப்பு! சேருவில – தங்கநகர் பகுதியில் சம்பவம். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் எரிபொருள் பௌசருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (17) இரவு இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சேருவில பகுதியில் இருந்து தோப்பூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் வந்த எரிபொருள் பௌசருடன்…

Read More

சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் .

சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் மட்டக்களப்பு ஏறாவூர் பெண் பாடசாலை வீதியை சேர்ந்த அப்துல் வாஹிட் இர்சாத் அலி மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதி மன்றத்தில் மாவட்ட நீதிவான் எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்னிலையில் தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் பக்கீர் முகைதீன் அப்துல் வாஹிட், நாகூர் ஹாஜி சித்தி அப்பாசியா தம்பதிகளின் புதல்வர் ஆவார். மட்/மம/அல்-ஜுப்ரியா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் மட்/மம/ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்கல்வியையும் கற்ற இவர் மட்/மம/ஏறாவூர் அலிகார்…

Read More

ஓட்டமாவாடி பிரதேச சபை SLMC வசமானது.

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான அணி கைப்பற்றிக் கொண்டது. இதன் தொடரில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய உள்ளூராட்சி மன்றங்களைத் தம்வசப்படுத்திக் கொண்டது. அதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக முஹம்மது பைறூஸ் மற்றும் உதவித்தவிசாளராக ஏ.எச்.நுபைல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் (06), தமிழ்ரசுக்கட்சி (01), சுயேட்சைக்குழு (01)…

Read More

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடையில் தீ பரவல்.

பொதுமக்கள் அவதானம்! முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைகள் தீ பரவல் முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) தீ பரவல் ஏற்பட்டு கடைகள் எரிகின்றன. மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவும் பலத்த காற்று வீசுகின்றது. காற்றின் வேகத்தினால் தீபரவல் மிக வேகமாக அதிகரித்துள்ளது. தீச் சுவாலைகள் நீண்ட தூரம் காற்றினால் வீசக்கூடும் மிக மிக மக்கள் அவதானமாக இருக்கவும். முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு…

Read More

நாய் கடித்தமைக்கு நஷ்டஈடு கோரிய பெண்.

மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டு காரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நஷ்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய விசித்திரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது ஓய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் 3 நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற முன்னாள்…

Read More

காத்தான்குடி மீடியா போரத்தின் 25வது வருட நிறைவு விழா.

காத்தான்குடி மீடியா போரத்தின் 25 ஆவது வருட நிறைவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும் (எம்.ஐ.அப்துல் நஸார்) காத்தான்குடி மீடியா போரத்தின் 25 ஆவது வருட நிறைவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும் கடந்த சனிக்கிழமை (14) போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் காத்தான்குடி கடற்கரை ஸஹா திருமண மண்டபத்தில் இரு அமர்வுகளாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம்.முஸ்தபா கலந்து கொண்டார்….

Read More

இந்திய நடிகர் மோகன்லால் இலங்கையை வந்தடைந்தார்.

நடிகர் மோகன்லால் இலங்கை வருகை. பிரபல இந்திய நடிகர் மோகன்லால் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ பாபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர். பேட்ரியோட் ( Patriot) என்ற படத்தின் 3 நாட்கள் படபிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் 08 மொழிகளில் (Pan India) இந்த திரைப்படம் பெரும் பண செலவில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்.

Read More

பாதுகாப்பு உத்தியோகத்தர் வெறும் காவலராக மட்டுமல்லாமல், வரவேற்பாளராகவும், தகவல்களை வழங்குபவராகவும், நோயாளர்களுக்கு உதவிபுரியும் மனப்பாங்குடன் சேவை செய்பவராகவும் தொழிற்பட வேண்டும்” – Dr. ஆர். முரளீஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களில் பாதுகாப்பு காவல் கடமைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பாடலும் அதன் முக்கித்துவம் பற்றியதுமான கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. பணிமனையின் Dr. சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில், 12.06.2025 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இடம்பெற்ற இக் கருத்தரங்குக்கு தலைமைதாங்கி உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கிழக்கு மாகாண அங்கத்தவர்களின் நலன்கருதி மாவட்ட ரீதியான ஒன்றுகூடல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுடனான விசேட ஒன்றுகூடல் இன்று மாலை அட்டாளைச்சேனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் அல்-ஹாஜ்.என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றதுடன்,…

Read More
Back To Top