விபத்தினை தடுத்த பஸ் சாரதிக்கு பாராட்டு.

உடவெவல யக்காவெல பகுதியில் பயணித்த CTB பஸ் மீது பாரிய மரம் ஒன்று விழுவதை கண்டு பஸ் வண்டியின் சாரதி பயணிகளை காப்பாற்றுவதற்காக பஸ்ஸை பாதுகாப்பான இடத்திற்கு திருப்பியுள்ளார்.இச்சம்பவத்தில் பாரிய மரம் பஸ்ஸின் மீது விழுவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மரத்தின் சிலபகுதிகள் பஸ் சாரதியின் பக்கத்தை தாக்கியதால் சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். பாரிய உயிர்ச் சேத விபத்து ஒன்றிலிருந்து பயணிகளை காப்பாற்றி சிறுகாயமடைந்த பஸ் சாரதியை பாராட்டியுள்ளனர்.

Read More

மட்/போதனா வைத்தியசாலைக்கு  நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக MSM. நஸீர் நியமனம் .

மட்டு.போதனா வைத்தியசாலையின் நிரந்தர திடீர் மரண விசாரணையாளராக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் நியமனம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மற்றொரு நிரந்தர திடீர் மரண விசாரணையாளராக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 01-06-2025ம் திகதியிலிருந்து நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த இவர், நேற்றைய தினம் (04-06-2025) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி முன்னிலையில் போதனா வைத்தியசாலைக்கான மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

Read More

உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்தல்.

உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகளில் “H -800க்கு அமைய உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை” (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமையவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதனின் தலைமையிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டன. இச்செயற்பாடுகளில் போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகள் பார்வையிடப்பட்டன. கடைகளில் சுகாதார நிலைமைகள், உணவுப்பொருட்களின் பாதுகாப்பு பரிசீலனை…

Read More

மட்டக்களப்பு மாவட்ட முன்னோடி அபிவிருத்தி குழுக் கூட்டம்.

🔸மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி அவர்களின் பங்குபற்றுதலோடு எதிர்வரும் 11 திகதி அன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் சகிதம் இன்று (04) நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

Read More

பண்டைய கால வியாபார முறை.

பண்டைக்கால வணிகர்களிடம் ஒரு நல்ல வழக்கம் இருந்தது.கடையை திறந்ததும் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியை வைத்து விடுவார்கள். முதல் வாடிக்கையாளர் வந்து வாங்கி சென்ற பின் நாற்காலியை எடுத்து உள்ளே வைத்து விடுவார்கள்.அடுத்த வாடிக்கையாளர் வந்தால் கடைக்காரர் கடையை விட்டு வெளியே வந்து கடைத்தெருவில் எந்த கடையின் முன் நாற்காலி இருக்கிறதோ அந்த கடையை காட்டி உங்களுக்கு தேவையான பொருள் அந்த கடையில் கிடைக்கும் என்று கூறி அனுப்பிவிடுவார்கள். சக வணிகர் இன்னும் அவரது வியாபாரத்தை துவக்க…

Read More

மட்டக்களப்பு குற்றத்தடுப்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் மட்டுநகரில் திறந்து வைப்பு  பொறுப்பதிகாரியாக IP மேனன் நியமனம். கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீயசூரயவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கிழக்குமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெசுந்தரவும் கலந்துகொண்டார். கிழக்கு மாகாண குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் பதில் பொலிஸ் மா…

Read More

சத்தியபிரமாண நிகழ்வு.

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு. (எம்.பஹத் ஜுனைட்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைக்கு தெரிவாகிய நகர முதல்வர், பிரதி நகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் , மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர், சுயேட்சை குழு உறுப்பினர் ஆகியோருக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (01) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற…

Read More

மாபெரும் இரத்த தான முகாம்.

உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்.. (எம்.பஹ்த் ஜுனைட்) காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு காத்தான்குடி குபா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் காத்தான்குடி உதவுங் கரங்கள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை(01) உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.ஏ.ஜவ்ஸகி தலமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. காத்தான்குடி குபா ஜும்ஆப்…

Read More
Back To Top