
ஓட்டமாவடியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ளது.
வாழைச்சேனை தியாவட்டவான் சந்தியில் கல்முனைக்கு பயணித்து கொண்டிருந்த பிராயாணிகள் பஸ் மீது காட்டு யானை தாக்குதல்.பஸ் வண்டி சேதம். பயணிகள் எவருக்கும் பாதிப்பில்லை
வாழைச்சேனை தியாவட்டவான் சந்தியில் கல்முனைக்கு பயணித்து கொண்டிருந்த பிராயாணிகள் பஸ் மீது காட்டு யானை தாக்குதல்.பஸ் வண்டி சேதம். பயணிகள் எவருக்கும் பாதிப்பில்லை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் நலன் கருதி காங்கையன் ஓடை ஊடான பஸ் சேவையை மீண்டும் தொடருங்கள் . நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்நளீம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் விடுத்த கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றம் . மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் வாசுதேவன் அவர்களது ஒழுங்கமைப்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது . இதன்போது…
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டார். புதிய அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்வு” கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார். 2024 ஆம் ஆண்டில் 16.1 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை இந்த ஆண்டு 18.2 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கும்…
நேற்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ச, மாலை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்க்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இலங்கை ராமண்ய பீடத்தின் 74 ஆவது உப சம்பதா அரச நிகழ்வை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (22)நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்து கொண்டார். நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் தெரிவித்தார். இலங்கை பெளத்த மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக சிறப்புக்குரிய பணியை ஆற்றியிருப்பதாகவும், அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளிடம் பாதுகாப்பாக கையளிக்க வேண்டியது…
கல்குடா வை.எம்.எம்.ஏ. அமைப்பினால் மஜ்மா நகரில் கொரோனா மர நடுகைத்திட்டம். (எஸ்.எம்.எம்.முர்ஷித்.) வை.எம்.எம்.ஏயின் 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகர் கொரோனா மையவாடியைச் சுற்றி ஆயிரம் மரக்கண்டுகளை நடும் வேலைத்திட்டத்தை கல்குடா வை.எம்.எம்.ஏ. கிளையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பேரவையின் தேசியத் தலைவர் அம்ஹர் ஷரீபின் ஆலோசனைக்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீனின் வழிகாட்டலில் முன்னாள் தலைவர் எம்.ரீ.தாஸீம் பவுனீயா, மாவட்டப்பணிப்பாளர் எம்.ஆர்.ஜெமீல்,…
(SMM.முர்ஷித் செய்தியாளர்) இலங்கை இராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் சார்ஜன்ட் மேஜராகப் பணியாற்றிய முஹம்மது புஹாரி கடந்த 18.01.2025ம் திகதி Regimental Sargent Major ஆகப்பதவியுயர்வு பெற்று யாழ் 512வது படைப்பிரிவில் தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக் கொண்டார். லெபனானில் சர்வதேச அமைதி காக்கும் படையில் இலங்கை படையனி சார்பாக இணைந்து செயலாற்றிய இவர், வெளிநாடுகளில் விசேட இராணுவ பயிற்சியும் பெற்று 13 பதக்கங்கள் பெற்று, பிரதேசத்துக்கு பெருமை தேடிக்கொடுத்த இராணுவ வீரராவார். கடந்த கொவிட் காலத்தில் கொரோனா ஜனாசாக்களை மஜ்மா…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வீதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது புதன் கிழமை (22/01/2025) இடம்பெற்றுள்ளது.மரணமானவர் சாதூலிய பாடசாலை வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த சீனிமுஹம்மது முஸம்மில் (வயது 43) இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சகோதரர் (தம்பி) உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று பணம் தருமாறு கேட்டதாகவும் அதனை அவர் தருவதற்கு மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்டவர் அவரை…
புகையிரத வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை காலை ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஓட்டமாவடி பகுதியால் செல்லும் போது நபரொருவர் புகையிரத பாதையை கடக்கும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், காயமடைந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி அசனார் சீது (வயது 51) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வாழைச்சேனை…
கண்டி-மஹியங்கனை பிரதான வீதி, கஹடகொல்லவுக்கு அருகிலுள்ள 18-வளைவுப் பகுதியில் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும்.