போதைப் பொருளுடன் ஒருவர் கைது.

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 23 பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை 01.30 மணியளவில் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே…

Read More

முழக்கம் அப்துல் மஜீத் காலமானார் .

அப்துல் மஜீட் அவர்களுடைய இழப்பு கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். அனுதாப செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்எம்.எஸ். நழீம். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் சிரேஷ்ட பிரதித் தலைவரும் இணைந்த வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மாமனிதருமான முழக்கம் அப்துல் மஜீட் அவர்களுடைய மரணச்செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைகின்றேன். அவரின் மரணமானது கட்சிக்கு பாரிய ஓர் பேரிழப்பாகும்.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியிலே மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்…

Read More

நாடு திரும்பினார் ஜனாதிபதி .

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு(17) நாடு திரும்பியுள்ளனர். PresidentSL #anurakumardissanayake #returned #indian #etnnews

Read More

ஏறாவூரில் அதிகாலை நேரம் விபத்து.

ஏறாவூரில் இன்று அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் .மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் . மேலதிக விபரம் ….. ஏறாவூரில் இன்று அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. பண்டாரகமுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்தே காரே தூக்க களைப்பினால் கட்டுப்பாட்டை இழந்து ஹாட்வெயார் கடைக்குள் புகுந்துள்ளது. உயிர் சேதம் மற்றும் படுகாயம் எதுவும் இடம்பெறவில்லை.எனினும் கடைக்குள்…

Read More

இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு .

ஓட்டமாவடியில் இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு விழா. எஸ்.எம்.எம்.முர்ஷித் இளைஞர்களின் தொழில் விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது இளைஞர் பயிற்சி நிலையம் ஓட்டமாவடியில் இன்று (திங்கள்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இளைஞர் சேவைகள் அதிகாரியும் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ஏ.எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சி.தர்ஸன…

Read More

ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு.

ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று காலை ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

Read More

வாழைச்சேனையில் கார்த்திகை தீபநாள்.

வாழைச்சேனை கார்த்திகை தீபநாள். (எஸ்.எம்.எம்.முர்ஷித்) இன்று (சனிக்கிழமை) கார்த்திகை தீப நாளை முன்னீட்டு வருடாவருடம் கலைவாணி கலைமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நடை பெறுவது வழக்கம். 2024 ம் ஆண்டின் கார்த்திக தீபம் ஏற்றும் நிகழ்வு வாழைச்சேனை கலை வாணி கலைமன்ற தலைவர் சு.டிலக்சன் தலைமையில் வாழைச்சேனை இந்து மையானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நூற்றுகனக்கான மக்கள் பங்கேற்றதுடன் கல்லறையில் உறங்கிகொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு அவர்களின் உறவினர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் கலைவானி…

Read More

மல்வத்தையில்  தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின்  சடலம்  மீட்பு.

மல்வத்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு! சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பி நாயகர் புரம், மல்வத்தையை சேர்ந்த குலசேகரன் ரவி (வயது 62) என்பவரே மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்….

Read More

வீதி விழிப்புணர்வு நாடகம்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு “மெய்யான கிறிஸ்மசும் மது இல்லாத சமுதாயம்” எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை போதகர் k.தங்கராஜா தலைமையில் இடம்பெற்றது.

Read More
Back To Top