

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்.
பரபரப்பான போட்டியின் மத்தியில் புதிய தலைவராக பைறூஸ் தெரிவு
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபாலக கேட்போர் கூடத்தில் இன்று (27) சனிக்கிழமை நடைபெற்றது.
மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாகவும், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கௌரவ அதிதியாகவும் முக்கியஸ்தர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக போரத்தின் செயலாளராக, தலைவராகப் பதவி வகித்து, இதுகாலவரை மிகவும் சிறப்பாக அமைப்பை நடாத்திச் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் என்.எம். அமீன் இம்முறை போட்டியிடவில்லை.
மிகவும் பரபரப்பானதும் விறுவிறுப்பானதுமான தலைமை போட்டிக்கு வாக்களிப்பு மூலம்
தலைவர் பதவிக்காக போட்டியிட்ட விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ் 84 வாக்குகளை பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
