Umar Arafath

யோஷித ராஜபக்சவிற்கு ஜனவரி 27 ஆம் திகதிவரை விளக்குமறியல்

நேற்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ச, மாலை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்க்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

Read More

இலங்கை ராமண்ய பீடத்தின் 74 ஆவது உப சம்பதா அரச நிகழ்வை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல்

இலங்கை ராமண்ய பீடத்தின் 74 ஆவது உப சம்பதா அரச நிகழ்வை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (22)நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்து கொண்டார். நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் தெரிவித்தார். இலங்கை பெளத்த மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக சிறப்புக்குரிய பணியை ஆற்றியிருப்பதாகவும், அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளிடம் பாதுகாப்பாக கையளிக்க வேண்டியது…

Read More

மஜ்மா நகரில் ஆயிரக்கணக்கான மரநடுகை வேலைத்திட்டம்

கல்குடா வை.எம்.எம்.ஏ. அமைப்பினால் மஜ்மா நகரில் கொரோனா மர நடுகைத்திட்டம். (எஸ்.எம்.எம்.முர்ஷித்.) வை.எம்.எம்.ஏயின் 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகர் கொரோனா மையவாடியைச் சுற்றி ஆயிரம் மரக்கண்டுகளை நடும் வேலைத்திட்டத்தை கல்குடா வை.எம்.எம்.ஏ. கிளையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பேரவையின் தேசியத் தலைவர்  அம்ஹர் ஷரீபின் ஆலோசனைக்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீனின்  வழிகாட்டலில் முன்னாள் தலைவர்  எம்.ரீ.தாஸீம் பவுனீயா, மாவட்டப்பணிப்பாளர் எம்.ஆர்.ஜெமீல்,…

Read More

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த முஹம்மது புஹாரி  512வது படைப்பிரிவில் சார்ஜண்ட் மேஜராக பொறுப்பேற்றார்.

(SMM.முர்ஷித் செய்தியாளர்) இலங்கை இராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் சார்ஜன்ட் மேஜராகப் பணியாற்றிய  முஹம்மது புஹாரி கடந்த 18.01.2025ம் திகதி Regimental Sargent Major ஆகப்பதவியுயர்வு பெற்று யாழ் 512வது படைப்பிரிவில் தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக் கொண்டார். லெபனானில் சர்வதேச அமைதி காக்கும் படையில் இலங்கை படையனி சார்பாக இணைந்து செயலாற்றிய இவர், வெளிநாடுகளில்  விசேட  இராணுவ பயிற்சியும் பெற்று 13 பதக்கங்கள் பெற்று, பிரதேசத்துக்கு பெருமை தேடிக்கொடுத்த  இராணுவ வீரராவார். கடந்த கொவிட் காலத்தில் கொரோனா ஜனாசாக்களை மஜ்மா…

Read More

பிறைந்துறைச்சேனையில்  குடும்பஸ்த்தர் ஒருவர்  சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிறைந்துறைச்சேனை சாதுலியா வீதியில் குடும்பஸ்த்தர் ஒருவர்  சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது புதன் கிழமை  (22/01/2025) இடம்பெற்றுள்ளது.மரணமானவர் சாதூலிய பாடசாலை வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த சீனிமுஹம்மது முஸம்மில்  (வயது 43) இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சகோதரர் (தம்பி) உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று  பணம் தருமாறு கேட்டதாகவும் அதனை அவர் தருவதற்கு மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்டவர் அவரை…

Read More

புகையிரத  வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகையிரத  வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை காலை ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஓட்டமாவடி பகுதியால் செல்லும் போது நபரொருவர் புகையிரத பாதையை கடக்கும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், காயமடைந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி அசனார் சீது (வயது 51) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வாழைச்சேனை…

Read More

கண்டி-மஹியங்கனை பிரதான வீதி தற்காலிக பூட்டு

கண்டி-மஹியங்கனை பிரதான வீதி, கஹடகொல்லவுக்கு அருகிலுள்ள 18-வளைவுப் பகுதியில் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும்.

Read More

ஓட்டமாவடி முச்சக்கர வண்டி சந்திவெளியில் விபத்து – பலருக்கு காயம்

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர். மேலதிக விசாரணைகளை  சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் . மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து…

Read More

நுவரெலியாவில் அடை மழை – உடப்புசல்லாவ வீதி நீரில் மூழ்கும் அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று (19) பிற்பகலில் வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர் வீதியைக் கடந்த செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா கந்தபளை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயம் செய்யும் தாழ்…

Read More

சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான  விக்டர் ஐவன் இன்று காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் இன்று (19) காலமானார். 1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார். அவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் ஒரு போதகராக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரத் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க கருத்தியல் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

Read More
Back To Top