Umar Arafath

2025ம் ஆண்டுக்கான A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு .

2025 A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியானது 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செவ்வாய்கிழமை (31) வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகியவற்றுக்குச் சென்று, பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஏறாவூர் பசீர் சேகுதாவூத் பாடசாலைக்கு பொருட்கள் வழங்கி வைப்பு.

ஏறாவூர் மட்/பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்திற்கு அலுவலக பொருட்கள் வழங்கி வைப்பு. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி அலுவலக பாவனை பொருட்களும் வகுப்பறைக்கான வெண்பலகையும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான SL.முனாப்தீனால் இன்று செவ்வாய்கிழமை பாடசாலை அதிபர் SAC.அஜ்மல்கானிடம் கையளிக்கப்பட்டது. பொருட்கள் கையளிப்பு நிகழ்வில் ஒய்வுநிலை ஆசிரியர் ALM.றபீக் மற்றும் ஆசிரியர் N.நசீர் அஹமட் உட்பட மாணவர்கள் என பலர் மேற்படி நிகழ்வில்…

Read More

ஜாஹிர் ஜே.பி.வெற்றிக்கிண்ணம் மாளிகா பிங்க் அணி வசமானது.

ஜாஹீர் ஜே.பி வெற்றிக்கிண்ண இறுதியாட்டம் : மாளிகா பிங்க் அணி சம்பியன் (நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினரும், பிரதேச சமூக சேவகருமான ஏ.எம். ஜாஹீரின் பெயரில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற ஜாஹீர் ஜே.பி வெற்றிக்கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதியாட்டத்தில் மாளிகா பிங்க் அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவாகியது. மாளிகா விளையாட்டுக்கழகத்தின் நான்காவது ஆண்டை முன்னிட்டு கழகத் தலைவர் எஸ். பஸ்லூன் தலைமையில் சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய…

Read More

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிதியுதவி .

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் மாற்றித்திறனாளி மாணவர்களில்ளுக்கு நிதியுதவி. சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சினூடாக மாற்றுத்திறனாளிகளுக்கான செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளியான பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கும் நோக்கில் கல்விக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று 30.03.2026ம் திகதி திங்கட்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறுக், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் சிறாஜி,…

Read More

பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் மறைவிற்கு ரவூப் ஹக்கீம் எம்.பி.இரங்கல் செய்தி.

மருத்துவப்பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம். அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேசளவில் புகழ் பூத்த உண்மையான முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் மருத்துவப் பேராசிரியராகவும், மருத்துவ நிபுணராகவும் சீரும் சிறப்புமாகப்பணியாற்றி, அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டியதுடன், நாட்டின் சுகாதாரக்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விலைமதிப்பற்ற…

Read More

விமானப்படையினால் புதிய கணணி மற்றும் தகவல் தொழிநுட்ப மையம் பாடசாலைக்கு கையளிப்பு.

விமானப்படையினால் புதிய கணனி, தகவல் தொழிநுட்ப மையம் கையளிப்பு விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் (DESSFORD) தமிழ் மகா வித்தியாலயத்திற்கான புதிய கணனி மற்றும் தகவல் தொழிநுட்ப மையம் கையளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி, விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தகவல் தொழிநுட்பப்பிரிவினால் நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் (DESSFORD) தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கணனி…

Read More

நேர்மையாக செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதிக்கு கௌரவிப்பு.

ஓட்டமாவடியில் முச்சக்கர வண்டிச்சாரதிக்கு கெளரவிப்பும் பாராட்டும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச்சாரதி முஸ்தபா இக்பால்  (28) ம் திகதி ஓட்டமாவடி மேம்பாலத்தடியில் கண்டெடுத்த 14 இலட்சம் ரூபா பெருமதியான தங்க நகையையும் 19,420/- ரூபா ரொக்கப்பணத்தையும் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்து, உரியவரிடம் கையளித்திருந்தார். இவரது நேர்மையையும் நற்பண்பையும் பாராட்டிநேற்று (29)இரவு 7.30 மணியளவில் ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்திக்கருகில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசீக் தலைமையில் பொன்னாடை போர்த்தி  பாராட்டி விருது வழங்கிக்கெளரவிக்கும் நிகழ்வு…

Read More

மருதமுனையில் உயிர்தெழும் சருகுகள் நூல் வெளியீட்டு விழா.

மருதமுனையில் ‘உயிர்த்தெழும் சருகுகள்’ நூல் வெளியீட்டு விழா (நூருல் ஹுதா உமர்) மருதமுனையை சேர்ந்த சிரேஷ்ட தமிழ்ப்பாட ஆசிரியை பாத்திமா ஸூபா தல்ஹா எழுதிய “உயிர்த்தெழும் சருகுகள்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா  (28) சனிக்கிழமை அன்றும்  மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. Renge view சிறிலங்கா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த நூல், கவிதாயினியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். ஏற்கனவே “சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” எனும் நூலை வெளியிட்டுள்ளார். பொரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய…

Read More

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது .

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம். (கே.எ.ஹமீட்) அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. அனுபம மங்கள விக்கிரமாரச்சி அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் இன்று (26.03.2026) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது….

Read More

மூத்த ஊடகவியலாளர் சலீமின் மறைவுக்கு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்.

மூத்த ஊடகவியலாள் சலீமின் மறைவிற்குமீடியா போரம் அனுதாபம் மூத்த ஊடகவியலாளரும், நிந்தவூரைச் சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமையுமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. கடந்த ஜந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை ஊடகத்துறையில், குறிப்பாக தமிழ் ஊடகப்பரப்பில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் ஏ.எல்.எம். சலீம். 1966ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊடகத்துறையில் காலடி பதித்த அன்னார், இளம் தலைமுறையினரை இனங்கண்டு ஊடகவியலாளர்களாகவும் கலைஞர்களாகவும் வளர்த்தெடுத்து…

Read More
Back To Top