நிந்தவூர் பிரதேச சபையினால் தெரு மின்விளக்குகள் சீர்செய்யப்படுகிறது.
பிரதேச சபையினால் தெரு மின்விளக்கு சீரமைப்பு பணி (பாறுக் ஷிஹான்) நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெருமின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், அரசடி நகர் வட்டாரத்திற்குட்பட்ட பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாசல், மஸ்ஜிதுல் பிலால், மஸ்ஜிதுல் ஹிதாயா, மஸ்ஜிதுல் ஹைர், மஸ்ஜிதுல் ஜெமிலா, மஸ்ஜிதுல் நூர், மஸ்ஜிதுல் மர்ஜான் மற்றும் மஸ்ஜிதுல் அலியார் ஆகிய பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் பழுதடைந்திருந்த தெருமின் விளக்குகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன….
