ஏறாவூர் பொதுச்சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

ஏறாவூர் பொதுச் சந்தை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது..

ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், ஏறாவூர் பொதுச் சந்தை புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை  (17) ஏறாவூரில் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.

ஏறாவூர் நகரசபை தவிசாளர்  எம்.எஸ். நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதேவேளை, கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ் அப்துல் வாசித் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதிய சந்தை வளாகம், ஏறாவூர் பிரதேசத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய கட்டமைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அரசியல், சமூக மற்றும் மதத் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top