
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
மட்டு. போதனா வைத்தியசாலை வரலாற்றுச்சாதனை கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை கடந்த 15ம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி இன்று (21) புதன்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட பொது வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் உள்ளிட்ட குறித்த அறுவைச்சிகிச்சையினை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகளும் இதன் போது குறித்த ஊடக…