Umar Arafath

காத்தான்குடி நகரசபைக்கு புதிய செயலாளர் .

காத்தான்குடி நகரசபையின் புதிய செயலாளராக திருமதி. றினோஸா முப்லிஹ் நியமனம். காத்தான்குடி நகரசபையின் புதிய செயலாளராக திருமதி. றினோஸா முப்லிஹ் இன்று செவ்வாய்க்கிழமை(09) மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி MRF றிப்கா ஷபீன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் SHM. அஸ்பர் ஆகியோரின் முன்னிலையில் கடமையினை பொறுப்பேற்றார்.

Read More

மடிக்கணணி பை வழங்கி வைப்பு.

ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினி பை வழங்கி வைப்பு.. (எம்.பஹத் ஜுனைட்) காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினா்களுக்கு மடிக்கணினி பை வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(06) அல்-பஜ்ர் பள்ளிவாயலில் நடைபெற்றது. காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் சிரேஷ்ட ஊடகவியலாளா் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்விடிவெள்ளி பத்திாிகையின் பிரதம ஆசிரியா் எம்.பீ.எம்.பைரூஸ் ,காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தா் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஜவாஹிா் (பலாஹி) ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் போரத்தின் ஆயுட்காலத் தலைவா் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) உட்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்….

Read More

பொலன்னறுவை பள்ளித்திடலில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் மரணம்.

பொலன்னறுவை, பள்ளித்திடலில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் மரணம். நேற்று (30) பிற்பகல் வேளை வயலுக்குச்சென்ற போதே இத்துயர் மிகு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலம் சென்றவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீட் என அறியப்படுகிறார்- அன்மைக்காலங்களாக காட்டு யானைகளின் தாக்குதலினால் அப்பாவி உயிர்ப்பலிகள் அதிகரித்துள்ளதையிட்டு பொது மக்கள் கவலையடைந்துள்ளனர். இதே நேரம், கடந்த வாரம் நாட்டில் பிறிதொரு பகுதியில் வயலுக்குச்சென்ற தாயும் மகளும் காட்டு யானையின் தாக்குதலினால் பலியானமை பெரும் பரபரபை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

6 வருடங்கள் காத்திருந்து தனது பெற்றோரை கொன்ற நபரை கொன்று, எரித்து, புதைத்த மகன் கைது.2019 சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய கடற்படை வீரர். கலேவெல, தேவஹுவ பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு தமது பெற்றோரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, ஒருவரைத் தாக்கி கொலை செய்து, அவரது உடலை எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கடற்படையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலேவெல மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கலேவெல, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59…

Read More

ஆரஞ்சு சுறா.

கோஸ்டா ரிகா நாட்டில், தேசிய பூங்கா அருகில் இந்த சுறா மீன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த சுறா அரிதானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உடல்நிலை காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடியாது என்றும் நீதிபதி அனுமதித்தால் Zoom தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் அறிவிப்பு. இதேவேளை நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

30 வது ஆண்டு நிறைவு விழா.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 30ஆவது ஆண்டு நிறைவு விழா 2025 செப்டம்பர் 27ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் போரத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2025.09.27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இலக்கம் 211, ஒராபி பாஷா வீதி, மருதானை, கொழும்பு 10ல் உள்ள AMANI GRAND மண்டபத்தில்நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்து லில்லாஹ்! மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட…

Read More

விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு.

விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு. அரசின் வேலைத்திட்டங்களில் ஒன்றான விவசாயிகளின் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், விவசாய அமைச்சு மற்றும் உலக வங்கியின் அனுசரணையின் கீழ் குளங்கள் மற்றும் வாவிகளினுடைய புனர்நிர்மாணம் தொடர்பாக பொத்துவில் பிரதேச எல்லைக்குரிய 08 குளங்கள், அணைக்கட்டுக்களை நிர்மாணிக்கும் பணிகளைப் பார்வையிடுவதற்காக சமூக வலுவூட்டல் கிராமிய அபிவிருத்திப்பிரதியமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ, இலங்கை அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அபிவிருத்திக்குழுத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை நேரடியாக…

Read More
Back To Top