மறைந்த ஊடகவியலாளர் காத்தான்குடி புவி றஹ்மத்துல்லாஹ்வுக்கு சிறிலங்கா மீடியா போரம் அனுதாபம்.
துணிச்சல்மிக்க ஊடகத்துறைக்கு முன்மாதிரியாக விளங்கியவர் புவி ரஹ்மதுல்லாஹ். ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான புவி ரஹ்மதுல்லாஹ் அவர்களது மரணம் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. காத்தான்குடி பிரதேசத்தை மையப்படுத்தி அவர் வெளியிட்ட “வார உரைகல்” பத்திரிகை அப்பிரதேசத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாமறிவோம். ஊழல் மோசடிகளுக்கெதிராகவும் அநியாயத்தை தட்டிக் கேட்பதிலும் அவர் மிகுந்த நெஞ்சுரத்துடன் செயற்பட்டார். வயதான காலப்பகுதியில் கூட செய்திகளை சேகரித்தல்,…
