இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் இலங்கைக்கு வருகை

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சிறப்பு வரவேற்பளித்தார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர்…

Read More

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு தூதுவர்கள் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின்  புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பிரான்ஸ் தூதுவராக ரெமி லம்பேர்ட்டும் (Mr. Remi Lambert), பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம். கலீலும் (Mr.Ihab I.M. Khalil), நேபாள தூதுவராக  கலாநிதி பூர்ண பகதூர் நேபாளியும் (Dr. Purna Bahadur Nepali) நியமிக்கப்பட்டுள்ளனர்….

Read More

கபே அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களை வலுவூட்டும் செயற்திட்டம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுப்பு.

கபே அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களை வலுவூட்டும் செயற்திட்டம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுப்பு. #செய்தியாளர் உமர் அறபாத் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் “கபே” அமைப்பின் ஏற்பாட்டில் டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் ஊடக விளங்கறிவு எனும் தொனிப்பொருளில் மூன்று நாள் வதிவிட பயிற்சித் திட்டம் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தலைமையில்  புதன்கிழமை அன்று மட்டக்களப்பு கல்லடி தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது . இலங்கையில் நான்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டம் மூன்று மாகாணங்களில்…

Read More

புதிய கல்வி மறுசீரமைப்பை 2026 ஆம் ஆண்டு ஆரம்பிக்க நடவடிக்கை

கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி கௌரவ அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரியகல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுடன் இணைந்த ஆறு உப குழுக்கள் புதிய கல்வி மறுசீரமைப்பை 2026ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி கௌரவ அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள்…

Read More

ஏறாவூர் நகர சபைக்கு உள்ளுராட்சி ஆணையாளர் திடீர் விஜயம்

உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி இன்று ஏறாவூர் நகர சபைக்கு திடீர் விஜயம். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஏறாவூர் நகர சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். இதன் போது நகர சபை வளாகத்தைப் பார்வையிட்ட அவர் உடனடியாக உத்தியோகத்தர்களுக்கான கூட்டமொன்றையும் நடாத்தினார். நகர சபையின் நிருவாகம் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்குவிசேட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கிய அவர் அரசாங்கத்தின்“கிளீன் சிறீ லங்கா” சிறப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உள்ளூராட்சி…

Read More

இன்று ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல் நாளை

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், இச் சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளககுழுவின் ஊடாக விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மின்சக்தி அமைச்சும் விரிவான விசாரணையை நடாத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இது போன்ற நிலைமை…

Read More

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு. மறுமலர்ச்சிக்காக அணிதிரளும் முதலாவது சுதந்திர தின கொண்டாட்டம்.

Read More

நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி (ஒன்லைன் முறை) மூலம் வழங்க அனுமதி

நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி (ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை,  அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் உண்மையாக மக்களைச் சென்றடையும் வகையில் வினைத்திறனான சேவைகளை வழங்கும்…

Read More
Back To Top