இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு .
ஓட்டமாவடியில் இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு விழா. எஸ்.எம்.எம்.முர்ஷித் இளைஞர்களின் தொழில் விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது இளைஞர் பயிற்சி நிலையம் ஓட்டமாவடியில் இன்று (திங்கள்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இளைஞர் சேவைகள் அதிகாரியும் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ஏ.எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சி.தர்ஸன…
