வெள்ள அனர்த்த சேத மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் .

🔸வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் காத்தான்குடியில் விசேட கூட்டம்..! அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், மீனவர்கள் மற்றும் அன்றாட தொழில் செய்வோர் எதிர்நோக்கிய சேதங்கள் தொடர்பாகவும், அவற்றுக்கான அரசாங்க நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும், இன்று (5) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ….

Read More

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு.

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டத்தில் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திலும் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இன்று (29) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய…

Read More

வெள்ள அனர்த்த நோய்களில் சிக்கிக் கொள்வதை தவிர்த்து கொள்வோம் .

வெள்ள அனர்த்த நோய்களில், சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல். அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. மழைநீர் பல்வேறு வாழ்விடங்களில் புகுந்ததன் காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், தோல் வியாதிகள், சுவாசத் தொற்றுகள், வயிற்றோட்டம் போன்ற நோய்களும் ஏற்படலாம். ஆகவே, கீழ்வரும் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்:அசுத்தமான நீரில் நடைபயணம் செய்த பிறகு, அல்லது அந்த பகுதிகளில் சென்று வந்தால், சவர்க்காரம்…

Read More

ஏறாவூர் நகரசபையில் அனர்த்தங்களை எதிர்கொள்ள  விஷேட அவசர ஏற்பாடுகள் .

தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் இருபத்து நான்கு மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் கௌரவ தவிசாளர் தலைமையிலான அனர்த்த முகாமைத்துவ மையமொன்றை ஏறாவூர் நகர சபையில் உருவாக்குவதற்கு நேற்றைய தினம்இடம்பெற்ற ஆறாவது மாதாந்த அமர்வில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைவாக ஏறாவூர் நகர சபையின் அனர்த்த மையக் குழுவானது கௌரவ உறுப்பினர்களைஉள்ளடக்கியதாக செயற்படும். எனவே, அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்கள் குறித்த தகவல்களைஉடன் நகர சபையின் அனர்த்த மையத்திற்கு அறியத்தருமாறு கௌரவ…

Read More

உன்னிச்சை இருநூறுவில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் மீள ஜூம்ஆ தொழுகை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

உன்னிச்சை இருநூறுவில் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் ஜும் ஆ தொழுகை மீள ஆரம்பம். (எம். பஹத் ஜுனைட்) வவுணதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் 2008 க்குப் பின்னரான மீள் குடியேற்றத்திற்குப் பின்னர் ஜும் ஆ தொழுகை இடம்பெற்ற போதிலும் 2019 இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலை காரணமாக மீண்டும் மக்களின் குடிபெயர்வு காரணமாகவும் இடைநிறுத்தப்பட்ட ஜும் ஆ தொழுகை இன்று வெள்ளிக்கிழமை (21) மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது. இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கம் மற்றும்…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது.

ஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்கிரஸ் வசமானது – தவிசாளராக எம்.எஸ்.ஹலால்தீன் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் போது, ஐக்கிய தேசியக்கட்சி, சுயேட்சைக்குழு உறுப்பினர், தமிழரசுக்கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கியிருந்தனர். ஏலவே, தவிசாளர் பதவியைப்பெற்றுக்கொண்ட எம்.எச்.எம்.பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதைத்தொடந்து தவிசாளர்…

Read More

காத்தான்குடி ஜமிய்யதுல் உலமா கிளையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம். (எம்.பஹத் ஜுனைட்) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தும்மாபெரும் இரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை (16) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவருகிறது. காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கிளை தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எம்.ஹாறூன் (ரஷாதி) தலைமையில் இடம்பெற்ற இம் முகாமில் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு…

Read More

பங்களாதேஷ் ஊடகத்துறை பேராசிரியர் கபில் கானுடன் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு.

பங்களாதேஷ் ஊடகத்துறை பேராசிரியர்கபில் கானுடன் மீடியா போரம் சந்திப்பு. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் (Daffodil International University) ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறை இணைப் பேராசிரியர் அப்துல் கபில் கான்அவர்களுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை அன்று (13.11.2025) கொழும்பில் இடம்பெற்றது. போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் தலைமையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஊடகத்துறை மேம்பாடு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பங்களாதேஷிலுள்ள…

Read More

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  அதன்படி, சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 24 ஆம்…

Read More

ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா.

ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் முப்பெரும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது! (ஏ.எல்.எம்.சபீக்) மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் முப்பெரும் விழாக்கள் (06) வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஏ. எம். கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல்.சேட், ஆப்தீன் கலந்து கொண்டார். மேலும், கௌரவ அதிதிகளாக சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்…

Read More
Back To Top