காத்தான்குடி ஓய்வூதியர்களின் நலன்புரி அமைப்பின் முஹர்ரம் விழாவும் ஒன்று கூடல் நிகழ்வும்.

காத்தான்குடி அரச சேவை ஓய்வூதியர்களின் நலன்புரி அமைப்பின் முஹர்ரம் விழாவும் ஒன்று கூடல் நிகழ்வும் புதன்கிழமை (17) நலன்புரி அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எம்.முஸ்தபா(பலாஹி) தலைமையில் காத்தான்குடி கடற்கரை ரைய்யான் பீச் கார்டன் வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய பாடல்,கவிதை போன்ற நிகழ்வுகள் மற்றும் அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றது. அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட அங்கத்தவர்களுக்கு அன்பளிப்பு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

Rebuilding Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது.

நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக 125 தொழில்நுட்ப அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர் டித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்துள்ள பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரும் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக, ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. டித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும்…

Read More

வானிலை முன்னறிவிப்பு.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு மழை நிலைமை: சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை…

Read More

மூத்த எழுத்தாளர் SLM.ஹனீபாவின் நூல் வெளியீட்டு விழா.

சிறப்பாக இடம்பெற்ற மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் “The Meccan Shawl” வெளியீட்டு விழா. கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Meccan Shawl” எனும் தலைப்பிலான நூலை கஸல் பதிப்பகம் மற்றும் ஜஃப்னா மொனிட்டர் இணைந்து வெளியிட்டிருந்தது. இந்நூலின் மொழிபெயர்ப்பை பேராசியர் ந.அசோகன், எஸ்.சிவசேகரம் மற்றும் பஸ்மிலா ரவிராஜ் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். இந்நூல் வெளியீட்டு விழா கொழும்பில் அமைந்துள்ள ஒலிம்பிக் மாநாட்டு மண்டபத்தில் 14/06/2026 அன்று இடம்பெற்றது. கஸல் பதிப்பாளர் ஸப்றியின் தலைமையில்…

Read More

கிழக்கு மாகாண உள்ளுராட்சி  ஆணையாளர் நியமனம்.

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம். கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகப் பணியாற்றி வந்த ஏ.ரி.எம்.றாபி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனக்கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டது. உள்ளூராட்சி நிர்வாகத்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட அதிகாரியான ஏ.ரி.எம்.றாபி அவர்கள் பல்வேறு உள்ளூராட்சி நிறுவனங்களில் பொறுப்பான பதவிகளை வகித்து திறமையான நிர்வாகியாகத் திகழ்ந்து வந்துள்ளார். அண்மைக்காலமாக கல்முனை…

Read More

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வு விஜயம் மற்றும் கலந்துரையாடலில் அமைச்சருடன் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு.

பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க ஆகியோருடன் (12 ஜூன்) கொழும்பு புரக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆய்வுப் பயணம் மற்றும் கலந்துரையாடலில் பங்கேற்றனர். நாட்டின் பிரதான பொதுப் போக்குவரத்து மையங்களுள் ஒன்றான புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளின் பின்னர் அண்மையில் மீளத் திறந்து வைக்கப்பட்டது. பல மில்லியன்…

Read More

சாவகச்சேரியில்  புதிய பொலிஸ் விடுதி திறந்து வைப்பு.

சாவகச்சேரியில் புதிய பொலிஸ்உத்தியோகத்தர் விடுதி திறந்து வைப்பு. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழா வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்,பொலிஸ்மா அதிபர்,வடமாகாண பிரதிப் பொஸிஸ்மா அதிபர்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர்,பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Read More

பேராதனை வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிப்பு.

பேராதனை போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பிரதான மருத்துவ ஆய்வு கூடம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) பொதுமக்களிடம் கையளிப்பு. பேராதனை போதனா வைத்தியசாலையின் 92 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீனமயப்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பிரதான மருத்துவ ஆய்வு கூடம் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. பேராதனை போதனா மருத்துவமனையில் குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வந்த விபத்து…

Read More

கடற்தொழில் திணைக்கள பணிப்பாளரின் அவசர அறிவித்தல்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் தொடர்ந்தும் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையில் இருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ந்து இடைநிறுத்தம் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடமிருந்து அவசர அறிவித்தல் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 2026.06.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி முதல் நிலவி வரும் சீரற்ற வானிலை நிலவரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதன் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மிகவும் அவதானமாக…

Read More

7வது சீனா-தெற்காசியா ஒத்தழைப்பு மன்றத்தில் உரையாற்றினார் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா.

7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உரை “அண்டை நாடுகளுடன் இணைந்த எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரில் நடைபெற்ற 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்டார். மன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், பிராந்திய ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை, அமைதியான இணை வாழ்வு மற்றும் கூட்டு வளர்ச்சி ஆகியவற்றிற்கான இலங்கையின்…

Read More
Back To Top