

காத்தான்குடி அரச சேவை ஓய்வூதியர்களின் நலன்புரி அமைப்பின் முஹர்ரம் விழாவும் ஒன்று கூடல் நிகழ்வும் புதன்கிழமை (17) நலன்புரி அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எம்.முஸ்தபா(பலாஹி) தலைமையில் காத்தான்குடி கடற்கரை ரைய்யான் பீச் கார்டன் வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய பாடல்,கவிதை போன்ற நிகழ்வுகள் மற்றும் அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றது. அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட அங்கத்தவர்களுக்கு அன்பளிப்பு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
