மூத்த எழுத்தாளர் SLM.ஹனீபாவின் நூல் வெளியீட்டு விழா.

சிறப்பாக இடம்பெற்ற மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் “The Meccan Shawl” வெளியீட்டு விழா.

கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Meccan Shawl” எனும் தலைப்பிலான நூலை கஸல் பதிப்பகம் மற்றும் ஜஃப்னா மொனிட்டர் இணைந்து வெளியிட்டிருந்தது. இந்நூலின் மொழிபெயர்ப்பை பேராசியர் ந.அசோகன், எஸ்.சிவசேகரம் மற்றும் பஸ்மிலா ரவிராஜ் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

இந்நூல் வெளியீட்டு விழா கொழும்பில் அமைந்துள்ள ஒலிம்பிக் மாநாட்டு மண்டபத்தில் 14/06/2026 அன்று இடம்பெற்றது. கஸல் பதிப்பாளர் ஸப்றியின் தலைமையில் நிகழ்ந்த இந்நிகழ்வில் நூல் தொடர்பான விமர்சனத்தை எழுத்தாளர் விஷ்ணு வாசுவும் மொழிபெயர்ப்பாளர் அம்பிகை திவகலாலா போர்மனும் முன்வைத்தனர்.

மொழிபெயர்ப்பு மற்றும் தொகுப்பு வேலைகள் தொடர்பாக அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழக விரிவுரையாளர் பஸ்மிலா ரவிராஜ் இணையம் ஊடாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ஜஃப்னா மொனிட்டர் ஆசிரியர் அருளினியன் மகாலிங்கம் தவிர்க்க முடியாத காரணத்தால் வராமையினால் அவரது குறிப்பை அஷ்ஷெய்க் சைபுல்லாஹ் நிகழ்வில் முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.எல்.எம்.ஹனீபா தொடர்பான தனது நினைவுகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூஃப் ஹக்கீம் பகிர்ந்துகொண்டார்.

நூலாசிரியர் எஸ்.எல்.எம்.ஹனீபா இணைய காணொளி ஊடாக தனது ஏற்புரையை முன்வைத்தார். தனக்கு கிடைத்த உன்னதமான அங்கீகாரமாக இம்மொழிபெயர்ப்பை சிலாகித்துப் பேசினார்.

இறுதியாக அஷ்ஷெய்க் ரமீஸ் நளீமியின் நன்றியுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது. நிகழ்வை சகோதரர் நாஃபி தொகுத்து வழங்கியிருந்தார்.

நூல் வெளியீட்டு நிகழ்வில் முதல் பிரதி கஸல் பதிப்பாளர் ஸப்றியினால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் ஏனையவர்களுக்கு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top