சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் கல்முனைக்குடி -03 கிறீன் பீல்ட் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு!

(பாறுக் ஷிஹான்) தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமத்தை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் clean srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வளமான நாடு வளமான கிராமம் என்ற தொனிப்பொருளில் கீழ் தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவிற்கு கீழ் உள்ள கல்முனைக்குடி -03 கிறீன் பீல்ட் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(16) நடைபெற்றது. குறித்த நிகழ்வானது விருந்தினர் வரவேற்கப்பட்டதுடன் மத அனுஸ்டானம், கிராஅத் ஓதலுடன் ஆரம்பமாகியது.இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி…

Read More

மத்திய கிழக்கு போர்ச்சூழலுக்கு மத்தியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார். மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை எதிர்கொண்டு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையினராலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மாற்று வழிகள் குறித்தும் இதன்போது மீளாய்வு…

Read More

நோன்பு பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி எல்லைக்குள் கட்டுமான பணிகளுக்கு தடை.

எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20.03.2026 ஆம் திகதி தொடக்கம் 24.03.2026 ஆம் திகதி வரை கட்டுமான வேலைகளை மேற்கொள்வது மற்றும் கட்டுமான பொருட்களை வீதிகளில் கொட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோருக்கு எதிராக நகரசபை கட்டளைச்சட்டம் 255 ஆம் அத்தியாயம் 74 தொடக்கம் 84 பிரிவுகளின் கீழ் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காத்தான்குடி நகரசபை தவிசாளர் SHM.அஸ்பர் தெரிவித்துள்ளார் .

Read More

ஏறாவூரில் சமூக உற்பத்தி திறனுக்கான மாதிரி கிராமம் அங்குராப்பணம்.

சமூக உற்பத்தி திறனுக்கான மாதிரி கிராமம் அங்குரார்ப்பன நிகழ்வு. ஏறாவூர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட றகுமத் நகர் கிராமத்தை ஒரு மாதிரி உற்பத்தி கிராமமாக மேம்படுத்தும் நோக்கோடு 03 பிரதான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (16.03.2026) ஏறாவூர் பிரதேச செயலாளர் SH. முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. “தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வீட்டு உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் கல்வி,…

Read More

20 வருடங்களுக்கு மேலாக செப்பனிப்படாத பொத்துவில் ஜெய்க்கா சுனாமி கிராம வீதிக்கு துரித அபிவிருத்தி.

சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக செப்பனிடப்படாத வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் 2 கோடியே 62 இலட்சம் நிதியொதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்தின் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாமலிருந்த 1,200 மீட்டர் நீளமான ஜெய்க்கா சுனாமி கிராம வீதி காபட் வீதியாக செப்பனிடும் அங்குரார்ப்பண நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம் தலைமையில், அம்பாறை…

Read More

நிந்தவூர் பிரதேச சபையினால் தெரு மின்விளக்குகள் சீர்செய்யப்படுகிறது.

பிரதேச சபையினால் தெரு மின்விளக்கு சீரமைப்பு பணி (பாறுக் ஷிஹான்) நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெருமின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள்  ஞாயிற்றுக்கிழமை (15) அன்று முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், அரசடி நகர் வட்டாரத்திற்குட்பட்ட பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாசல், மஸ்ஜிதுல் பிலால், மஸ்ஜிதுல் ஹிதாயா, மஸ்ஜிதுல் ஹைர், மஸ்ஜிதுல் ஜெமிலா, மஸ்ஜிதுல் நூர், மஸ்ஜிதுல் மர்ஜான் மற்றும் மஸ்ஜிதுல் அலியார் ஆகிய பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் பழுதடைந்திருந்த தெருமின் விளக்குகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன….

Read More

126 கிமீ வேகத்தில் பந்து வீசி பாராட்டுக்களை பெற்றுள்ளார் லதுசன்.

126 கிமீ வேகத்தில் பந்து வீசி இலங்கை அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் மலிங்கவையே மிரள வைத்துள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த  அழகையா லதுசன். மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய பழைய மாணவனும் சிவானந்தியன் விளையாட்டுக்கழக வீரருமான 22 வயதுடைய அழகையா லதுர்சன் கிறிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கா தலைமையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற திறமை தேடல் முகாமில் மணிக்கு 126 கிமீ வேகத்தில் பந்து வீசி மலிங்கவினதும் அங்கிருந்தவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். நேற்று (14)தேர்வில் பந்து…

Read More

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபருடன் அஷ்ரப்  தாஹீர் எம்.பி.கலந்துரையாடல் .

புதிய அரசாங்க அதிபரைச் சந்தித்தார் பாராளுமன்ற உறுப்பினர்  அஷ்ரப் தாஹிர். (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கடமையேற்ற அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கடந்த வியாழக்கிழமை (12) நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இச்சந்திப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், நிர்வாக ஒழுங்குகள் மற்றும் மக்கள் நலத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால…

Read More

கல்முனை கடற்கரைப் பகுதியில் சிரமதானம்.

கல்முனை கடற்கரைப்பகுதியில் சிரமதானப்பணி (பாறுக் ஷிஹான்) கல்முனை YMCA இன் அனுசரணையுடன் கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) காலை கல்முனை கடற்கரைப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமை குரு அருட்திரு. ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட்செல்வி சலோஜினி ஆகியோர் கலந்து கொண்டதுடன் திருச்சபையின் மக்களும் இதன்போது இணைந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர் . சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு கல்முனை மாநகர சபையினால் வாகன ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தது சிரமதான பணியில் ஈடுபட்டவர்களுக்கு…

Read More

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு.

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று (12) கொழும்பு, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்: முக்கிய உரை சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன. வலுசக்தி…

Read More
Back To Top