Blog
Your blog category
வைத்திய நிபுணர் நிமலரஞ்சன் இன்று காலமானார் .
மட்டக்களப்பில் பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் #நிமலரஞ்சன் காலமானார். மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இயற்கை எய்தினார் . திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல…
கொழும்பு மத்திய பேரூந்து நிலையம் இடமாற்றம்.
இலங்கை போக்குவரத்து சபை கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தற்போது போதிராஜ மாவத்தை வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று (12) பரீட்சிக்கப்பட்டன. நாடாவியரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதனை முன்னிட்டு பாடசாலை மாணவர் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுபாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் பாதுகாப்பு மற்றும் நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன்…
குருக்கள் மட மனித புதைகுழியினை பார்வையிட்டார் நீதிபதி .
குருக்கள் மட மனித புதை குழி இடத்தை பார்வையிட்ட நீதிபதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு குருக்கள் மடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (11) வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி, புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு காத்தான்குடி திரும்பிய ஹாஜிகள் மற்றும் வியாபாரிகள், கல்முனை மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் பகுதியில் கடத்திக் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதுடன், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கே…
ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளன புதிய அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு.
ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அதன் குறிக்கோள் குறித்தும், பொருளாதார அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறைகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது குறித்தும் வர்த்தக சமூகத்திற்கு அவசியமான வசதிகளை வழங்குதல் பற்றியும் இங்கு விளக்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலக்கு மயப்பட்டதும், அந்த…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலிருந்து இன்று வெளியேறினார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து இன்று உத்தியோகபூர்மாக வெளியேறி சென்றார்.
கபே அமைப்பினால் சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.
கபே அமைப்பின் ஊடாக சமூக செயற்பாடுகள் முன்னெடுப்பு. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் “கபே” அமைப்பின் ஏற்பாட்டில் புதன்கிழமை அன்று மட்/ ஏறாவூர் ஐயங்கேணி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு வைட்போட் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ்.மீராசாகிபு அவர்களின் கரங்களினால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி பிரதேசத்திற்கு விஜயம்.
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி பிரதேசத்தினை நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று இன்று வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு! தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார இன்று (09) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட இருப்பதாகவும், சமூக நலனுக்கேற்ப குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என புதிய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.பிரதிப் குமார அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். முன்னால் சம்மாந்துறை பொலிஸ்…
