பிரதி அமைச்சர் மஹர சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் .
மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் நேற்று (14) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. மஹர சிறைச்சாலையைச் சுற்றி வசிக்கும் முஸ்லிம் சமூகத்தின் மத நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட இந்தப் பள்ளிவாசல், பாதுகாப்பு காரணங்களுக்காக 2019 முதல் மூடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்களுக்கு தமது…
