Headlines

நிந்தவூர் பிரதேச சபையினால் தெரு மின்விளக்குகள் சீர்செய்யப்படுகிறது.

பிரதேச சபையினால் தெரு மின்விளக்கு சீரமைப்பு பணி (பாறுக் ஷிஹான்) நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெருமின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள்  ஞாயிற்றுக்கிழமை (15) அன்று முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், அரசடி நகர் வட்டாரத்திற்குட்பட்ட பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாசல், மஸ்ஜிதுல் பிலால், மஸ்ஜிதுல் ஹிதாயா, மஸ்ஜிதுல் ஹைர், மஸ்ஜிதுல் ஜெமிலா, மஸ்ஜிதுல் நூர், மஸ்ஜிதுல் மர்ஜான் மற்றும் மஸ்ஜிதுல் அலியார் ஆகிய பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் பழுதடைந்திருந்த தெருமின் விளக்குகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன….

Read More

126 கிமீ வேகத்தில் பந்து வீசி பாராட்டுக்களை பெற்றுள்ளார் லதுசன்.

126 கிமீ வேகத்தில் பந்து வீசி இலங்கை அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் மலிங்கவையே மிரள வைத்துள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த  அழகையா லதுசன். மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய பழைய மாணவனும் சிவானந்தியன் விளையாட்டுக்கழக வீரருமான 22 வயதுடைய அழகையா லதுர்சன் கிறிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கா தலைமையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற திறமை தேடல் முகாமில் மணிக்கு 126 கிமீ வேகத்தில் பந்து வீசி மலிங்கவினதும் அங்கிருந்தவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். நேற்று (14)தேர்வில் பந்து…

Read More

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபருடன் அஷ்ரப்  தாஹீர் எம்.பி.கலந்துரையாடல் .

புதிய அரசாங்க அதிபரைச் சந்தித்தார் பாராளுமன்ற உறுப்பினர்  அஷ்ரப் தாஹிர். (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கடமையேற்ற அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கடந்த வியாழக்கிழமை (12) நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இச்சந்திப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், நிர்வாக ஒழுங்குகள் மற்றும் மக்கள் நலத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால…

Read More

கல்முனை கடற்கரைப் பகுதியில் சிரமதானம்.

கல்முனை கடற்கரைப்பகுதியில் சிரமதானப்பணி (பாறுக் ஷிஹான்) கல்முனை YMCA இன் அனுசரணையுடன் கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) காலை கல்முனை கடற்கரைப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமை குரு அருட்திரு. ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட்செல்வி சலோஜினி ஆகியோர் கலந்து கொண்டதுடன் திருச்சபையின் மக்களும் இதன்போது இணைந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர் . சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு கல்முனை மாநகர சபையினால் வாகன ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தது சிரமதான பணியில் ஈடுபட்டவர்களுக்கு…

Read More

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு.

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று (12) கொழும்பு, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்: முக்கிய உரை சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன. வலுசக்தி…

Read More

ஆலையடிவேம்பு கிராம சேவகர் பிரிவுக்கொரு வீட்டுக்கு அடிக்கல்.

ஆலையடிவேம்பில் கிராம சேவகர் பிரிவுக்கொரு வீட்டுக்கு அடிக்கல் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரஜாசக்தி நிதியொதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் நேற்று (11) புதன்கிழமை நடைபெற்றது. ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பரிவுக்கு ஒதுக்கப்பட்ட 22 வீடுகளில் முதல் 03 வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும்,…

Read More

போர் நிறுத்தத்துக்கு ஈரான் 3 முக்கிய நிபந்தனைகள் – சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவிப்பு

ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற உரையொன்றில் அவர் கூறுகையில், ஈரானின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் ஈரானை குறிவைத்து எந்தவிதமான தாக்குதலும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும், போர் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்….

Read More

மீண்டும் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது நிந்தவூர் அல்-அஷ்றக் கபடி அணி.

மீண்டும் வரலாற்றுச்சாதனை படைத்தநிந்தவூர் அல்-அஷ்றக் கபடி அணி. (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்வியமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய 2026ம் ஆண்டுக்குரிய தேசிய மட்ட கபடிப்போட்டிகள் கம்பளை வெலம்பொட எக்ஸிலியன் உட்புற விளையாட்டரங்கத்தில் கடந்த 07, 08, 09ம் திகதிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் 14, 16, 18 ஆகிய வயதுப்பிரிவு கபடி அணிகள் பங்கு கொண்டு மூன்று அணிகளுமே வெற்றிவாகைசூடி பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர். இதில் 18 வயதுக்குட்பட்ட…

Read More

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு.

இன்று(11) நள்ளிரவு முதல் Laugfsgas(லாஃப்ஸ் எரிவாயு) விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5kg எரிவாயு சிலிண்டர் 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 4630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 5kg எரிவாயு சிலிண்டர் 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக  1862 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Read More

மீன்பிடி தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு.

மீன்பிடி தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு. (நூருல் ஹுதா உமர்) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில் கல்முனை பிராந்தியத்தைச்சேர்ந்த மீனவர்களுக்காக இலங்கையின் மீன்பிடித்துறை, மீனவர்களுக்கு நிலவும் சவால்கள் மற்றும் மீன்பிடி தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று (11) கடற்றொழில், நீரியல்வளங்கள் திணைக்கள அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது. மீனவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், மீன்பிடி நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள்,…

Read More
Back To Top