ஏறாவூர் பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மிச்நகர் ஆயுள்வேத வைத்தியசாலை குறுக்கு வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று திங்கள்கிழமை(07)காலை மிச்நகர் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எச்.சபூர்தீன் தலைமையில் இடம்பெற்றது .

வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் தவிசாளருமான எம்.எஸ்.நழீம்,ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளருமான முத்துப்பிள்ளை முரளிதரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
கௌரவ அதிதிகளாக ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எல்.முனாப்தீன்,சமூக செயற்பாட்டாளர்.சீ.எல்.
நவாஸ்,பிரஜா சக்தி தலைவர் எச்.எம்.பைறாஸ்,பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அன்சார் மௌலவி , மிச்நகர் சனசமூக நிலையத்தின் நிருவாகிகள்,உலமாக்கள்,மிச்நகர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிருவாகிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .
ஏறாவூர் பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை பாராட்டி ஏறாவூர் மிச்நகர் சனசமூக நிலைய நிருவாகத்தினரால் ஏறாவூர் பற்று பிரதேசசபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
