
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் விஷேட செயற்திட்டம்.
போக்குவரத்து சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு செயற்திட்டம். விஷேட வேலைத்திட்டம் . உமர் அறபாத் -ஏறாவூர் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் செங்கலடி பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி JSA.ஜயலத் உட்பட பொலிஸ்…