Umar Arafath

சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலயத்தில் ‘Kamaroon Shines’ பாராட்டு விழாவும் ஸ்மார்ட் போர்ட் அன்பளிப்பு நிகழ்வு

சாய்ந்தமருது கமு/கமு/அல்-கமரூன் வித்தியாலயத்தில் தரம் ஐந்து மாணவர்களின் திறமைகள் மற்றும் சாதனைகளைப் பாராட்டும் வகையில் ‘Kamaroon Shines’ பாராட்டு விழாவும், ஸ்மார்ட் போர்ட் அன்பளிப்பு நிகழ்வும் இன்று (12) பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எச். நுஸ்ரத் பேகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி மேயரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

Read More

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு இரண்டாவது தடவையாக தேசிய விருது ,சமூகப் பிரச்சினைகளை அறிக்கையிடும் பணிக்காக தேசிய அங்கீகாரம்.

கொழும்பு, சின்னமன் கிரண்ட் ஹோட்டலில் நடைபெற்ற 27ஆவது தேசிய ஊடக விருது வழங்கும் விழாவில், தமிழன் பத்திரிகைக்காக சமூகப் பிரச்சினைகளை அறிக்கையிடும் பிரிவில் ஊடகவியலாளர் நூருல் ஹுதாவுக்கு தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் (Sri Lanka Press Institute), இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் (Editors’ Guild of Sri Lanka) இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் தேசிய ஊடக விருது வழங்கும் விழாவிலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சிலோன் மீடியா போரத்தின் பொதுச்…

Read More

இலங்கையில் விமானி இல்லாத மின்சாரப் பயணிகள் ட்ரோன் சேவை   பரீட்சார்த்த நடவடிக்கை இன்று.

ஆளில்லா, மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் ட்ரோன் சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முதலாவது உத்தியோகபூர்வ பரீட்சார்த்த நடவடிக்கை இன்று (11) கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இடம்பெற்றது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோரின் தலைமையில் இந்தப் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Read More

ஹிஸ்புல்லாஹ் எம்.பி.நிதி ஒதுக்கீட்டில் பொருட்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் பாடசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களுக்கு உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் 2026ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கு சுமார் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் எம்.எஸ். நளீம் ஹாஜியார்…

Read More

ஏறாவூர் மிச்நகரில் மாபெரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சுகாதாரச் சீர்கேடு தொடர்பில் வழக்குகளும் தாக்கல்.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மிச்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (10) மாபெரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸாபிறா வஸீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்தல், வீடுகள் மற்றும் வீடுகளைச் சூழவுள்ள சுற்றுப்புறச் சூழலைச் சுத்தப்படுத்துதல், பொதுமக்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன. இவ்வேலைத்திட்டத்தில்…

Read More

ஓட்டமாவடி_கொவிட்–19 மையவாடியில் மாபெரும் சிரமதானம்; நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளானோர் பங்கேற்பு.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எம்.எம். ஹலால்தீனின் ஒரு வருட சேவை நிறைவை முன்னிட்டு மனிதநேயப் பணி முன்னெடுப்பு! கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம். ஹலால்தீன் அவர்கள் தவிசாளராகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைவதை முன்னிட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டமாவடி மஜ்மா நகர் கொவிட்–19 மையவாடியில் மாபெரும் சிரமதான நிகழ்வு நேற்று (08.11.2026) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சிரமதானப் பணியில், நாட்டின் பல்வேறு…

Read More

யானை – மனித மோதலைக் குறைக்க வவுணதீவு கற்பானையில் பனம் விதைகள் நடுகை.

முதற்கட்டமாக 10,000 பனம் விதைகள் நடப்பட்டன; 20,000 விதைகள் நடுகை செய்யத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்பானை கிராமத்தில் யானை – மனித மோதலைக் குறைக்கும் நோக்கில் 20,000 பனம் விதைகளை நடுகை செய்யும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக 10,000 பனம் விதைகள் நேற்று வியாழக்கிழமை (05) கற்பானை பிரதேசத்தில் நடுகை செய்யப்பட்டன. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம்…

Read More

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மாணவன் ஜினாஸ் தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் வரலாற்றுச் சாதனை.

விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 55ஆவது சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் தேசிய மட்டப் போட்டியில், கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலய மாணவன் எம்.ஜெ.எம். ஜினாஸ் சிறப்பான சாதனையொன்றைப் படைத்துள்ளார். கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில், 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் (Shot Put) நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஜினாஸ், 11.45 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்….

Read More

மஹா ஓயா, இறக்காமம் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கான புதிய உத்தியோகபூர்வ இல்லங்கள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் திறந்து வைப்பு

மஹா ஓயா மற்றும் இறக்காமம் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் கடந்த 2026 நவம்பர் 04ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, குறித்த உத்தியோகபூர்வ இல்லங்களை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் லியனகே, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல உள்ளிட்ட…

Read More

இலங்கையின் திறன் அபிவிருத்தி முறைமையை நவீனமயப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடனுதவி.

இலங்கையின் திறன் அபிவிருத்தி முறைமையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று (06) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. 2027 முதல் 2031 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம், தொழிற்சந்தைக்குப் பொருத்தமான தொழிற்பயிற்சிகளை விரிவுபடுத்துதல், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்துதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் கீழ், மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனம் சிறப்பு மையமாகத் தரமுயர்த்தப்படுவதுடன், 09 தொழிற்பயிற்சி நிலையங்கள் பிராந்திய மையங்களாக மாற்றப்படவுள்ளன….

Read More
Back To Top