Umar Arafath

எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள மட்டக்களப்பு தயாராகிறது: துறைசார் நிபுணர்கள் பங்கேற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

எதிர்வரும் எல் நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை வலுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட எல் நினோ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ. எஸ். எம். ஸியாத் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், எல் நினோவின் செல்வாக்கும் அதன் தாக்கங்களை…

Read More

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடம்.

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் உள்ளன. எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது. ஒஸ்ட்ரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் குறைந்த நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன. ‘நம்பியோ’…

Read More

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”: கல்முனையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விழிப்புணர்வு செயற்றிட்டம் ஆரம்பம்.

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தலில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான சமூக மட்டத்திலான விழிப்புணர்வு மற்றும் ஒழிப்புச் செயற்றிட்டம், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த மக்கள் நல செயற்றிட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், நேற்று (11) கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆசாத் பிளாசா மண்டபத்தில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்றிட்டத்தின் அவசியம் குறித்து விளக்கிய ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,…

Read More

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு .

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28.06.2026) உடைந்து விழுந்தது. அந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று (09) மாலை முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து இன்று (10) காலை 9 மணி அளவில் மீண்டும் மக்களின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள் பாலத்திற்கு முன்பு…

Read More

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற மோதலில் காயமடைந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இலங்கை தேசிய மருத்துவமனைக்கு விஜயம்…

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மோதலில் காயமடைந்து, தற்போது இலங்கை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று பிற்பகல் (07) இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். அதன்போது, அமைச்சர், தேசிய வைத்தியசாலையின் 72 மற்றும் 79-வது விடுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுவரும் சிறைச்சாலை அதிகாரிகளையும் கைதிகளையும் நேரில் சந்தித்து, அவர்களின் நலம் விசாரித்ததோடு,…

Read More

Dream Destination’ திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு.

அரச – தனியார் கூட்டுப் பங்களிப்புடன் நாடு முழுவதிலும் உள்ள 100 புகையிரத நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் Dream Destination திட்டத்தின் கீழ், வசதிகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வையில், Clean…

Read More

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடிந்து விழுந்திருந்த பாலத்திற்குப் பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் இன்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன. மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தற்காலிக பாலம் அமைக்கும் பணிகளை, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் விரைவாக நிறைவு செய்யப்படவுள்ளதாகவும்…

Read More

கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்வு.

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சிவலக்ஸன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் பங்கேற்புடன் நேற்று (26) இடம் பெற்றது. டெங்கு நோய் அதிகம் பரவும் 14 மாவட்டங்களுள் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் சந்திவெளி பிரதேசத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் விசேட…

Read More

திருகோணமலையில் “ஒன்றாய் எழுவோம்” (Together We Rise) மாகாணத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.

இலங்கையின் சிவில் சமூக அமைப்புகளை (CSOs) அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் பலம் வாய்ந்த பங்குதாரர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட “ஒன்றாய் எழுவோம்” (Together We Rise) மாகாணத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நேற்று (23) திருகோணமலையில் அமைந்துள்ள JKAB ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள சமூக சேவைகள் அமைப்பை உத்தியோகபூர்வமாக ஒன்றிணைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியுடனும்,…

Read More

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் இரத்ததான நிகழ்வில் அதிகளவான மக்கள் பங்கேற்பு.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளின் இரத்த வங்கியின் தேவையை பூர்த்தி செய்வதற்காக காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மினா மண்டபத்தில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. ‘உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்’ என்னும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எஸ்.ஹமீட் தலைமையில் நடாத்தப்பட்ட இந்த முகாமில் இருநூற்றுக்கு மேற்பட்ட குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இவ் இரத்ததான நிகழ்வில் காத்தான்குடி…

Read More
Back To Top