கோறளைப்பற்று மத்தியின் பிரதான “அத்தம” தேசிய வேலைத்திட்ட நிகழ்வு

க்ளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” என்ற தொனிப்பொருளில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாடுகள் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் இடம்பெற்றுவரும் அதேவேளை இதன் பிரதான நிகழ்வு இன்று (31) 206சீ பிறைந்துரைச்சேனையில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் , உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், மற்றும் பிரஜா சக்தி தலைவர் ஏ.எம்.சப்றாஸ், பிரதேச சபை உறுப்பினர் ரீ.எல்.எம்.சித்தீக், இராணுவ அதிகாரிகள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் இர்பான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.சாதிக்கீன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், சமுர்த்தி மற்றும் முதியோர் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top