Umar Arafath

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடிந்து விழுந்திருந்த பாலத்திற்குப் பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் இன்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன. மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தற்காலிக பாலம் அமைக்கும் பணிகளை, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் விரைவாக நிறைவு செய்யப்படவுள்ளதாகவும்…

Read More

கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்வு.

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சிவலக்ஸன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் பங்கேற்புடன் நேற்று (26) இடம் பெற்றது. டெங்கு நோய் அதிகம் பரவும் 14 மாவட்டங்களுள் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் சந்திவெளி பிரதேசத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் விசேட…

Read More

திருகோணமலையில் “ஒன்றாய் எழுவோம்” (Together We Rise) மாகாணத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.

இலங்கையின் சிவில் சமூக அமைப்புகளை (CSOs) அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் பலம் வாய்ந்த பங்குதாரர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட “ஒன்றாய் எழுவோம்” (Together We Rise) மாகாணத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நேற்று (23) திருகோணமலையில் அமைந்துள்ள JKAB ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள சமூக சேவைகள் அமைப்பை உத்தியோகபூர்வமாக ஒன்றிணைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியுடனும்,…

Read More

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் இரத்ததான நிகழ்வில் அதிகளவான மக்கள் பங்கேற்பு.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளின் இரத்த வங்கியின் தேவையை பூர்த்தி செய்வதற்காக காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மினா மண்டபத்தில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. ‘உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்’ என்னும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எஸ்.ஹமீட் தலைமையில் நடாத்தப்பட்ட இந்த முகாமில் இருநூற்றுக்கு மேற்பட்ட குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இவ் இரத்ததான நிகழ்வில் காத்தான்குடி…

Read More

காத்தான்குடி ஓய்வூதியர்களின் நலன்புரி அமைப்பின் முஹர்ரம் விழாவும் ஒன்று கூடல் நிகழ்வும்.

காத்தான்குடி அரச சேவை ஓய்வூதியர்களின் நலன்புரி அமைப்பின் முஹர்ரம் விழாவும் ஒன்று கூடல் நிகழ்வும் புதன்கிழமை (17) நலன்புரி அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எம்.முஸ்தபா(பலாஹி) தலைமையில் காத்தான்குடி கடற்கரை ரைய்யான் பீச் கார்டன் வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய பாடல்,கவிதை போன்ற நிகழ்வுகள் மற்றும் அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றது. அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட அங்கத்தவர்களுக்கு அன்பளிப்பு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

Rebuilding Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது.

நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக 125 தொழில்நுட்ப அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர் டித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்துள்ள பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரும் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக, ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. டித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும்…

Read More

வானிலை முன்னறிவிப்பு.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு மழை நிலைமை: சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை…

Read More

மூத்த எழுத்தாளர் SLM.ஹனீபாவின் நூல் வெளியீட்டு விழா.

சிறப்பாக இடம்பெற்ற மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் “The Meccan Shawl” வெளியீட்டு விழா. கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Meccan Shawl” எனும் தலைப்பிலான நூலை கஸல் பதிப்பகம் மற்றும் ஜஃப்னா மொனிட்டர் இணைந்து வெளியிட்டிருந்தது. இந்நூலின் மொழிபெயர்ப்பை பேராசியர் ந.அசோகன், எஸ்.சிவசேகரம் மற்றும் பஸ்மிலா ரவிராஜ் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். இந்நூல் வெளியீட்டு விழா கொழும்பில் அமைந்துள்ள ஒலிம்பிக் மாநாட்டு மண்டபத்தில் 14/06/2026 அன்று இடம்பெற்றது. கஸல் பதிப்பாளர் ஸப்றியின் தலைமையில்…

Read More

கிழக்கு மாகாண உள்ளுராட்சி  ஆணையாளர் நியமனம்.

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம். கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகப் பணியாற்றி வந்த ஏ.ரி.எம்.றாபி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனக்கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டது. உள்ளூராட்சி நிர்வாகத்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட அதிகாரியான ஏ.ரி.எம்.றாபி அவர்கள் பல்வேறு உள்ளூராட்சி நிறுவனங்களில் பொறுப்பான பதவிகளை வகித்து திறமையான நிர்வாகியாகத் திகழ்ந்து வந்துள்ளார். அண்மைக்காலமாக கல்முனை…

Read More

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வு விஜயம் மற்றும் கலந்துரையாடலில் அமைச்சருடன் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு.

பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க ஆகியோருடன் (12 ஜூன்) கொழும்பு புரக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆய்வுப் பயணம் மற்றும் கலந்துரையாடலில் பங்கேற்றனர். நாட்டின் பிரதான பொதுப் போக்குவரத்து மையங்களுள் ஒன்றான புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளின் பின்னர் அண்மையில் மீளத் திறந்து வைக்கப்பட்டது. பல மில்லியன்…

Read More
Back To Top