மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு.

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மீராகேணி பக்தாத் முன்பள்ளி நிருவாகத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வழிகாட்டலுடன் இன்று (26)திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸாபிறா வசீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், மேற்பார்வை குடும்ப நல உத்தியோகத்தர், பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர், அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்பள்ளி ஆசிரியர்கள், பிரதேச பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணுதல், ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனையைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் மற்றும் பெண்களிடையே முறையான சுகாதாரப் பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top