

சுவிட்சர்லாந்து – இலங்கை இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்டிய நடனத்துடன் வரவேற்பு.
எடல்வைஸ் (Edelweiss) விமான நிறுவனம் குளிர்காலப் பருவத்திற்காக மீண்டும் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து வாரத்திற்கு மூன்று விமான சேவைகளுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கையை வந்தடைந்த பயணிகளை வரவேற்கும் வகையில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் பாரம்பரிய கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சி, பயணிகளுக்கு இனிய அனுபவத்தை வழங்கியது.
📷: Bandaranaike International Airport
