ஓட்டமாவடி முச்சக்கர வண்டி சந்திவெளியில் விபத்து – பலருக்கு காயம்

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர். மேலதிக விசாரணைகளை  சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் . மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து…

Read More

நுவரெலியாவில் அடை மழை – உடப்புசல்லாவ வீதி நீரில் மூழ்கும் அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று (19) பிற்பகலில் வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர் வீதியைக் கடந்த செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா கந்தபளை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயம் செய்யும் தாழ்…

Read More

சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான  விக்டர் ஐவன் இன்று காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் இன்று (19) காலமானார். 1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார். அவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் ஒரு போதகராக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரத் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க கருத்தியல் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

Read More

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்பு

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் நாளையதினம் பதவியேற்கிறார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. வழக்கமாக ஜனாதிபதி பதவியேற்பு விழா பாராளுமன்றம் முன்பு நடைபெறும். ஆனால் கடுமையான குளிர் நிலவுவதால் பாராளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற…

Read More

மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்த அறிக்கை 19.01.2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக ஆற்றினை அன்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பதுடன் நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உதவிப் பணிப்பாளர்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,மாவட்ட செயலகம்,…

Read More

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு நிகழ்வும் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 41வது மாணவர் வெளியேற்று வைபவமும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுகளின் போது பிரதம அதிதியாக ICST பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பி. தனேஸ்வரனும்  மேலும் திணைக்களத்தின் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டதுடன்அதனைத்…

Read More

இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணமானது 20% இனால் குறைப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுப்பாவனையின் போது 0 – 30 அலகுகளுக்கு 29%31 – 60 அலகுகளுக்கு 28%61 – 90 அலகுகளுக்கு 19%91 – 180 அலகுகளுக்கு 18%180 அலகுகளுக்கு மேல் 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12%அரச நிறுவனங்களுக்கு 11%ஹோட்டல்…

Read More

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் இன்று ஜும்ஆ கொதுபா ஓதிக் கொண்டிருக்கையில் வபாத்தானார்

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா ஓதிக் கொண்டிருக்கையில் வபாத்தானார்

Read More

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று ஆரம்பம்

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில்  ஆரம்பமானது. இதன்போது அனுர குமார திஸாநாயக்க காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார். இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை (EDB) என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் FACETS Sri Lanka…

Read More

ஏறாவூர்  ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கான புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஏறாவூர்  புன்னக்குடா ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கான புதிய நிருவாகத்தினை தெரிவு செய்யும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஏ.எம். அஷ்ரப் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர் மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா ஏறாவூர்…

Read More
Back To Top