வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு ஏர் கேர்டைன் வழங்கி வைப்பு.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கல்குடா டைவர்ஸினால் Air Curtain கையளிப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவுப்பொறுப்பாளர் தாதிய உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேபைப்பிரிவினால் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மிக அவசியத்தேவையாகக் காணப்பட்ட குளிரூட்டிக்குத் தேவையான Air Curtain வைத்தியசாலை அத்தியட்சகர் Dr எஃப்.பி.மதன் அவர்களிடம் நேற்று 09.07.2025ம் திகதி புதன்கிழமை கையளிக்கப்பட்டது. வைத்தியசாலை அத்தியட்சகர் Dr எஃப்.பி.மதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த Air Curtain கையளிக்கும் நிகழ்வில் அவசர…

Read More

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வீதி  பவணி.

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் “சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை நிர்மாணித்தல்” எனும் தொனிப்பொருளில் ஏறாவூர் அல் -அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையினால் போதைப்பாவனை மூலம் ஏற்படும் தீங்குகள் மற்றும் கொடிய டெங்கு நோயின் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் வீதி விழிப்புணர்வு பவணி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் SMM.நவாஸ் தலைமையின் கீழ் பாடசாலை வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் “சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்…

Read More

ஸ்ரீ விக்னேஸ்வரா பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவணி

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது (80) ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி கடந்த சனிக்கிழமை (05) இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக பாடசாலைக் கொடியேற்றம்,பாடசாலைக் கீதம் இசைத்தல்,அமுதவிழா கவி இசைத்தல்,மத குருமார் ஆசியுரை ஆகியன நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபவனி பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி, தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியியைச் சென்றடைந்து அங்கிருந்து ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. இதில்…

Read More

கிழக்கு ஆளுநர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு இன்று விஜயம் .

கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று (08) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து வைத்திய அத்தியட்சகர் Dr FP.மதன் மற்றும் அபிவிருத்திக்குழுவின் உப தலைவர் மெளலவி MMS.ஹாறூன் ஸஹ்வி ஆகியோரினால் ஆளுனருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr R.முரளீஸ்வரன் உட்பட வைத்திய அதிகாரிகள், அபிவிருத்திக்குழு…

Read More

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை இணைந்து செயற்படவிருக்கின்றது – Dr. ஆர். முரளீஸ்வரன் மட்டக்களப்பு பிராந்தியத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த கலந்துரையாடலினை தலைமைதாங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. R. முரளீஸ்வரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 07.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பணிமனையின் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலை, தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவின்…

Read More

பதில் அதிபருக்கு பாடசாலை சமூகம் வாழ்த்து.

ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தின் பதில் அதிபராக கடமையேற்றிருக்கும் ரீ.எல்.எம்.சக்கி ஆசிரியருக்கு பாடசாலைச்சமூகம் வாழ்த்து 2018.09.17 அன்று முதல் ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி 2025.07.04ம் திகதி முதல் பதில் அதிபராகக் கடமையேற்றிருக்கும் ரீ.எல்.ஏ.சக்கி ஆசிரியருக்கு பாடசாலைச்சமூகம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றது. இவர் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உறுதுணையாக விளங்கி வருவதுடன், பாடசாலை அபிவிருத்திச்சங்கப் பொருளாளராக, ஒழுக்கக்கட்டுப்பாட்டு குழுத்தலைவராக, ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தலைவராகவும் பல பதவிகளை வகித்து சிறப்பாக பணியாற்றி வருகின்றார். மாணவர்களின் நலன், பாடசாலையின் கல்வி வளர்ச்சி,…

Read More

ஐந்தாம் தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு.

அல்- மீஸான் ஒருங்கிணைப்பில் 400க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்ட தரம் ஐந்து இலவச கருத்தரங்கு ! மாளிகைக்காடு செய்தியாளர் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஒருங்கிணைப்பில் ஜூனியர் தமிழனின் “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலய 28 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தரம் ஐந்து மாணவர்கள் கலந்து கொண்ட புலமைப்பரிசில் இலவச கருத்தரங்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர்…

Read More

காத்தான்குடி மீடியா போரத்தின் கண்டன அறிக்கை .

ஊடகவியலாளர் மப்றூக் மீது வெறித்தனமான தாக்குதல்; காத்தான்குடி மீடியா போரத்தின் கண்டன அறிக்கை ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது கடந்த 2025 ஜூலை 02ஆம் திகதி இரவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, காத்தான்குடி மீடியா போரம் சார்பில் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஊடகவியலாளர் மப்றூக் காத்தான்குடி சார்ந்த நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் தனது ஊடகப் புலமை மூலம்…

Read More

எருமை மாட்டின் தாக்குதலால் இருவர் படுகாயம்.

நேற்று வியாழக்கிழமை இரவு எருமை மாடு ஒன்றின் அட்டகாசத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். அது தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று (03) வியாழக்கிழமை இரவு சுமார் 11:00 மணியளவில் காத்தான்குடி கடற்கரை பகுதியில் விரண்டு வந்த எருமை மாடு ஒன்று அங்கு நின்ற பெண் ஒருவரை குத்தி விட்டு போட்டார் சைக்கிள் ஒன்றையும் சேதப்படுத்திவிட்டு பின்னர் அப்றார் நகர் ஊடாகச் சென்று வீடு ஒன்றினுல் புகுந்து அங்கு இருந்த வயோதிப பெண்…

Read More

கண்டன அறிக்கை.

ஊடகவியலாளர்மப்ரூக்மீதான #தாக்குதலை ஸ்ரீலங்காமுஸ்லிம் மீடியாபோரம்கண்டிக்கிறது சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினருமான யூ.எல். மப்ரூக் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது. மப்ரூக், ஜூலை 2ஆம் திகதி புதன்கிழமை இரவு அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதியினால். “என்னைப் பற்றி எப்படி கதை எழுதுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது, மேலும் இது குறித்து போலீஸ் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஊடகவியலாளர்களின் பணிக்கு நேரடியான அச்சுறுத்தலாக இருப்பதுடன்…

Read More
Back To Top