நிந்தவூரில்  கடலரிப்பு பாதிப்பு.

பாரிய கடலனர்த்தப்பாதிப்பு – ஆதம்பாவா எம்பி நேரில் பார்வையிட்டு, துரித பாதுகாப்பு நடவடிக்கை. நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள அதிகமான பொதுமக்களின் காணி மற்றும் தென்னந்தோப்புகள் கடலுக்குள் சென்று விட்டன. அதில் ஒருவரின் 5 ஏக்கர் காணி முற்றாக கடலிலுக்குள் காவு கொள்ளப்பட்டுவிட்டது. இதன் காரணமாக அந்த பிரதேச தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வேண்டிக் கொண்டதிற்கிணங்க, நேற்று (23) திங்கட்கிழமை மாலை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,…

Read More

வாழைச்சேனை பகுதிகளில் காட்டு யானையின் அட்டகாசத்தால் பல சேதங்கள்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரப் பகுதிக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

Read More

மலையக மக்களை சந்தித்தார் ஜனாதிபதி .

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நுவரெலியா செல்லும் வழியில் இன்று (11) காலை அந்த மாவட்டத்தின் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் சுகதுக்கங்களை விசாரித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  சி.ஐ.டியில் முன்னிலை.

நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையானார். இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நீண்ட நாட்களின் பின்னர் குழந்தை பிரசவம்.

மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நீண்ட நாட்களின் பின் குழந்தை பிரசவம். எஸ்.எம்.எம்.முர்ஷித். மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் மிக நீண்ட நாட்களாக செயற்படாமலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மகப்பேற்றுப்பிரிவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி றிஸ்வியா சஜ்ஜாத் தெரிவித்தார். மிக நீண்டகாலமாக மகப்பேற்றுப்பிரிவு மூடப்பட்டிருந்த நிலையில் பொறுப்பு வைத்திய அதிகாரி றிஸ்வியா சஜ்ஜாத் பொறுப்பேற்றதன் பின் வைத்தியசாலையின் அபிவிருத்தியில் எடுத்து வரும் அயராத முயற்சியினால் மகப்பேற்றுப்பிரிவு அண்மையில் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன், வைத்தியசாலையின் பெளதீக…

Read More

யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் பலி.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் வியாழக்கிழமை (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

Read More

பாடசாலை அருகே உணவுப் பொருள் விற்பனை எனும் பெயரில் போதை வியாபாரிகள் .

பாடசாலை அருகே ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, மாம்பழ டேஸ்ட் போன்றவற்றுடன் போதைப்பொருளும் விற்பனை.! மாணவர்களிடையே பரவிவரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, பிஸ்கட், மாம்பழ டேஸ்ட் போன்றவற்றுடன் ‘மாவா’ மற்றும் ‘பாபுல்’ போன்றவற்றை மறைத்து விற்பனை செய்யும் முறை காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதுவரை 11…

Read More

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடன் விஷேட வேலைத்திட்டம் .

ஏறாவூரில் வீதி விபத்துக்களை தடுக்கும் விஷேட வேலைத்திட்டம் . அண்மைக்காலமாக ஏறாவூர் பிரதேசத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடன் விஷேட வேலைத்திட்டம் ஒன்று இன்று திங்கள்கிழமைமீராகேணி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி SA.சமந்த சிறிவர்தன,இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் லெப்டினன் கேனல் DM.அனஸ் அஹமட்,ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி JSA.ஜெயலத்,மாக்கான் மாக்கார் பாடசாலை அதிபர்.VT.ஜனூன்,ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான TM.உமர் அறபாத்…

Read More

இலங்கை மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு.

ஏமாறாதீர்கள்; 2,000 ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு. இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பணத்தாளை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடிக்கும்போது, வாள் ஏந்திய சிங்கத்தின் உருவம் மற்றும் “2000” என்ற இலக்கம் தெளிவாகத் தெரியும். பணத்தாளின் முன்பக்கமும் பின்பக்கமும் அச்சடிக்கப்பட்டுள்ள சிங்கத்தின் உருவம் வெளிச்சத்தில் பார்க்கும்போது ஒன்றிணைந்து முழுமையான படமாகக் காட்சியளிக்கும். பணத்தாளைச்…

Read More

இன்று அதிகாலை ஹபரணையில் விபத்து .

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹபரணையில் ஏற்பட்ட விபத்தில் ஏறாவூர் நகரசபை கௌரவ உறுப்பினர் அல்ஹாபிழ் உவைஸ்,ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சக்கூர் அவர்களும் அவரது மனைவி மற்றும் அம்புலன்ஸ் சாரதி அஸீம் அவர்களும் விபத்தில் சிக்கி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Read More
Back To Top