மல்வத்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு.
மல்வத்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு! சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பி நாயகர் புரம், மல்வத்தையை சேர்ந்த குலசேகரன் ரவி (வயது 62) என்பவரே மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்….