சுனாமி 20 ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய நிகழ்வு.
தேசிய இளைஞர் சேவை மன்றமும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து சுனாமி பேரனர்த்த 20வது ஆண்டு நினைவை முன்னிட்டு “அடுத்த தலைமுறைக்கு உறுதியான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் தொனிப் பொருளில் தேசிய நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. (M.N.M.அக்மல்-)செய்தியாளர். குறித்த நிகழ்வானது தேசிய இளைஞர் சேவை மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் G.சஜிப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.நிஷாந்தி அருண்மொழி, அனர்த்த…
